Tamil Cinema News | சினிமா செய்திகள்
96, ராட்சசன், நோட்டா வசூலில் எது டாப்.! இதோ வசூல் நிலவரம்.!
இந்த வருடத்தின் இரண்டாம் பாதி வந்துவிட்டது, தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வருடத்திற்கு 200 படங்களுக்கு மேல் வெளியாகின்றன இந்த நிலையில் அனைத்து படங்களும் வெற்றி அடைந்து விடுகிறார் என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

96
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் வந்த அனைத்து படங்களும் மக்களை கவர்ந்து விட்டது, மேலும் தற்போது வெளிவந்துள்ள படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது.
தற்பொழுது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் 96, நோட்டா,ராட்சசன் இந்த நிலையில் தமிழகத்தில் மிக முக்கிய இடமான சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் விவரம் இதோ
96- ரூ 1.86 கோடி, நோட்டா- ரூ 55 லட்சம், ராட்சசன்- ரூ 45 லட்சம்
மேலும் விஜய் சேதுபதியின் 96 திரைப்படத்திற்கும் விஷ்ணு விஷாலின் ராட்ச்சன் திரைப்படத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது அதனால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
