Connect with us
Cinemapettai

Cinemapettai

trisha

Reviews | விமர்சனங்கள்

கள்ளம் கபடம் இல்லாக் காதல் – ’96 திரைவிமர்சனம் !

மீண்டும் ஒரு புதிய வாரம், மீண்டும் ஒரு விஜய் சேதுபதி படம். மனுஷனுக்கு எப்படி தான் , இத்தனை படங்களில் நடிக்க நேரம் கிடைக்கிறதோ ? வரிசையாக படங்கள் வந்தாலும் , ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர் தான். பல நாட்களாகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய படம். ஒளிப்பதிவாளரான பிரேம், இயக்குனர் அவதாரம் எடுத்தாலோ என்னவோ, பட போஸ்டர்களில் அத்தனை விதம், மெனக்கெடல் தெரிந்தது.

கதை

ஹாலிவூட்டில் “Coming Of Age ” ட்ராமா படங்கள் அதிகம் வெளிவரும், அந்த வகையறா தான் இப்படம். 96 ஆம் வருடம் தஞ்சையில் தங்களின் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம்.

37 வயதாகியும் கல்யாணம் ஆகாமல் திரிந்து வரும் முரட்டு கட்டை ட்ராவல் போட்டோகராபராக விஜய் சேதுபதி. அவரின் பார்வையில் தான் படமும் நகர்கிறது.

பிளாஷ் பேக்கில் ஒரே கிளாசில் உள்ள இருவரும் காதல் பயப்படுகிறார்கள். இளம் வயது சேது , த்ரிஷா , தேவதர்ஷினி மூவரின் கதாபாத்திர அமைப்பும் தேர்வும் அசத்தல். ஏன் என்றே தெரியாத காரணத்தால் இவர்கள் காதல் தோல்வியில் முடிகின்றது . இப்பொழுது இந்த இருவரும் 22 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் பொழுது அவர்களுக்குள் நடக்கும் அன்பு பரிமாற்றம், பாசம், மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சம் தான் இரண்டாவது பாதி.

சினிமாபேட்டை அலசல்

இன்றைய பெஸ்டி ட்ரெண்டில் திரியும் மாடர்ன் கான்வென்ட், நெக்ஸ்ட் ஜென் கல்லூரி மாணவர்களுக்கு இப்படம் சற்றே அந்நியமாகவே தோன்றும். எனினும் 30 + டு 45 + ஆசாமிகள் இப்படத்தை தூக்கி வைத்து பேசுவர்.

ஒரு குழந்தையின் அம்மா ரோலில் திரிஷா உணர்ச்சிகளின் உச்சம் தொட்டுவிட்டார். விஜய் சேதுபதியை மகா நடிகன், அவரை விட இளம் வயது விஜய் சேதுபதி நடிப்பில் அசத்திவிட்டார். படம் முடிந்து வரும் பொழுது திரிஷா மற்றும் ஆதித்யா பாஸ்கர் தான் நினைவில் இருப்பர்.

தாய்க்குடம் பிரிட்ஜை சேர்ந்த கோவிந்த் வசந்த இசை. பின்ணணி இசை, பாடல்கள் அனைத்தும் அசத்தல். பல இடங்களில் யுவன் கிடையாதாபா இசை, வேற ஆளா என்று பலர் கேட்பது காதில் விழுகின்றது .

சினிமாபேட்டை வெர்டிக்ட்

இன்றைய பாஸ்ட் உலகில், யதார்த்தமான வாழ்க்கை என்ன என்று நம் கண் முன் கொண்டு வந்த இயக்குனருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். காமம் இல்ல காதலும் உண்டு என்று அழகாக காமித்துள்ளனர் இந்த டீம்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் ஷண்முக சுந்தரம் , திரிஷா மற்றும் ஆதித்யா பாஸ்கர் பல விருதுகளை தட்டி செல்வது உறுதி பீல் குட் சினிமா பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் இப்படம்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top