Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராம் – ஜானு கதாபாத்திரங்களுக்கு இயக்குனர் முதலில் முடிவு செய்த பெயர் என்ன தெரியுமா ?
’96
ஹாலிவூட்டில் “Coming Of Age ” ட்ராமா படங்கள் அதிகம் வெளிவரும், அந்த வகையறா தான் இப்படம். 96 ஆம் வருடம் தஞ்சையில் தங்களின் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம். 22 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் இருவருக்குள் நடக்கும் அன்பு பரிமாற்றம், பாசம், மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சம்.

96
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இருவரின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு வெகுவாக பாராட்டப்படுகிறது. ராமச்சந்திரன் என்கிற ராம், ஜானகி தேவி என்கிற ஜானு, இருவரின் கதாபாத்திரத்தில் தங்களையோ, அல்லது தங்களின் நண்பன், நண்பியையோ ரிலேட் செய்கின்றனர் படம் பார்ப்பவர்கள்.

96
இந்நிலையில் இயக்குநல் பிரேம்குமார் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார் ..
“முதலில் ஹீரோ , ஹீரோயின் ரோல்களுக்கு வினோத், ஜனனி என்று தான் பெயர் வைத்து தான் கதையா எழுதினாராம். பின்னர் ஸ்கிரிப்ட் படித்த பால்ஜி தரணீதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்) , இதில் ராமாயணம் கனெக்ட் உள்ளது என சொல்ல , பின் தான் மெயின் கதாபாத்திரங்களில் பெயரை மாற்றியுள்ளார் இயக்குனர்.
