Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வசூலில் பட்டையை கிளப்பும் 96 படம்.! 4 நாள் வசூல் முடிவு இதோ.!

நடிகர் விஜய்சேதுபதி வருடத்திற்கு 6 படத்திற்கு மேல் குறையாமல் நடிதுவிடுவார் இதில் பல படங்கள் ஹிட் ஆகியுள்ளன இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியது அனைவரும் அறிந்ததே, இதில் செக்கச்சிவந்த வானம் திரைப்படம் ஹிட் அடித்துவிட்டது இதற்க்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

மேலும் விஜய்சேதுபதி 96 படமும் 4 நாட்களுக்கு முன்பு வெளியாகியது இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார் படத்தின் கதை பள்ளி காலத்து காதலை நினைவுக்கு கொண்டுவந்துவிடும் அப்படி ஒரு காதல் திரைப்படம்.

இந்த படத்தில் வரும் காதலே காதலே பாடல் பல ரசிகர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டாஸாக வைத்துள்ளார்கள் இந்த நிலையில் இந்த படத்தின் 4 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது, 4 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 10 கோடி வரை வசூல் ஆகியுள்ளது தெரியவந்துள்ளது மேலும் இன்னும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு இருப்பதால் வசூல் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top