Tamil Cinema News | சினிமா செய்திகள்
’96 படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பவர் எந்த பிரபல நடிகரின் மகன் தெரியுமா ?
96
மக்கள்செவன் விஜய் சேதுபதி த்ரிஷ் நடிப்பில் “Coming Of Age ” ட்ராமா ஜானரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இப்படம். ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ பட ஒளிப்பதிவாளர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

96
96 ஆம் வருடம் தஞ்சையில் ஒரே கிளாசில் உள்ள இருவரும் காதல் வயப்படுகிறார்கள். அந்த இருவரும் 22 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் பொழுது அவர்களுக்குள் நடக்கும் அன்பு பரிமாற்றம், பாசம், மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சம் தான் இப்படம்.

Aditya Bhaskar
மகா நடிகன் விஜய் சேதுபதி, க்யூட் திரிஷா நடிப்பில் அசத்தினார் என்றாலும் , இளம் வயது சேது , த்ரிஷா , தேவதர்ஷினி மூவரின் கதாபாத்திர அமைப்பும் தேர்வும் அசத்தல் என்று தான் சொல்லவேண்டும்.
இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்த ஆதித்யா, நம் சீனியர் நடிகர் எம் . எஸ் . பாஸ்கரின் மகன் ஆவார்.

MS Bhaskar – Aditya Bhaskar
அப்பாவி தனம், குறும்பு, காதல், தவிப்பு என தன் நடிப்பால் அசத்திவிட்டார், நம் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
