இந்தியாவில் 95 சதவீத என்ஜினியர்கள் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்ற லாயக்கில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மதிப்பீட்டு நிறுவனம் அஸ்பிரிங் மைண்ட்ஸின் படி, இந்தியாவில் 95 சதவீத என் ஜினியர்கள் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்ற தகுதியற்றவர்கள் என்றும், 60 சதவீதம் பேர் சரியான புரோகிராம் கோடு எழுதுவதில்லை என்றும், 4.77 சதவீதம் பேர் மட்டுமே சரியாக புரோகிராம் கோடு எழுதுகிறார்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற காரணங்கள்:

கிட்டத்தட்ட 500 என் ஜினியரிங் கல்லூரியில் இருந்து வரும் 36 ஆயிரம் மாணவர்கள் சரியான புரோகிராமிங் திறமை இல்லாமல் வந்து கொண்டிருக்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு சரியான கோடு எழுதத்தெரிவதில்லை.

கிட்டத்தட்ட 60 சதவீதம் பேருக்கு சரியான புரோகிராமிங் கோடு எழுதவும் தெரியவில்லை, புரோகிராமை சரியான முறையின் ரன் பண்ணவும் தெரியவில்லை. மாறாக 1.4 சதவீதம் பேர் சரியான முறையில் சரியான புரோகிராமை எழுதி அதனை ரன் பண்ணவும் செய்கின்றனர்.

ஆனால், ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு முக்கியமானதே புரோகிராம் திறமை தான். அது கூட இல்லாமல் வரும் சாப்ட்வேர் என்ஜினியர்களால் இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன என்று அஸ்பிரிங் மைண்ட்ஸ் நிறுனத்தின் இணை நிறுவனர் வருண் அகர்வால் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மதிப்பீட்டின் படி சரியான புரோகிராம் கோடு எழுதுவதற்கு பதிலாக குருட்டு மனப்பாடம் செய்தும் புரோகிராம் கோடு எழுதுகின்றனர். இதன் காரணமாக சில பிரச்சனைகளும் உருவாகிறது.

திறமைவாய்ந்த புரோகிராமர்ஸ்க்கு அதிக சம்பளம் வழங்கபடுகிறது. ஆனால், திறமைவாய்ந்த புரோகிராமர்ஸ் பற்றாக்குறை காரணமாக ஐடி நிறுவத்திற்குள் தகுதியற்றவர்கள் நுழைந்துவிடுகின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டயர் 1 கல்லூரிகளை விட டயர் 3 கல்லூரிகள் புரோகிராம் திறமையில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.