Connect with us
Cinemapettai

Cinemapettai

Entertainment | பொழுதுபோக்கு

90களில் ஓஹோனு வரவேண்டிய 7 நடிகைகள்.. அழகு இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! தொடர்ந்து நமது வலைத்தளத்தில் பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில், 90களில் அறிமுகமாகி பெரிய இடத்தை பிடித்திருக்க வேண்டிய, அழகிய நடிகைகள், ஏதோ காரணத்தால் காணாமல் போயினர். அந்த லிஸ்டை பார்க்கலாம், வாங்க!

மோஹினி: 90களில் ஒரு சில படங்களில் தோன்றினாலும் தனது பேரழகால் இன்றும் நமது மனதில் இருப்பவர் மோகினி. பெயருக்கு ஏற்றவாறே மோகினியை போலத்தான் இருப்பார். அவர் நடித்து வெளிவந்த முதல் படமான ஈரமான ரோஜாவே படம் மிகப்பெரும் ஹிட். அந்த படத்திற்கு பிறகு எங்கேயோ போயிருக்க வேண்டியவர் என்ன காரணமோ தெரியவில்லை சீக்கிரம் காணாமலும் போய்விட்டார். இதை தவிர்த்து அவர் நடித்த எந்த படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியும் பெறவில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.

mohini

mohini

சிவரஞ்சனி: பல திரைப்படங்களில் நாயகனுக்கு தங்கையாக நடித்திருந்த சிவரஞ்சனி ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். அவருடைய பூனைக்கண் அவருடைய சிறப்பம்சங்களில் ஒன்று. இவருக்கும் அதிர்ஷ்டம் பெரிதாக கைகொடுக்காத காரணத்தால் சீக்கிரம் சினிமாவில் இருந்து ஒதுங்கி வெளிநாட்டில் திருமணத்திற்கு பின்பு செட்டில் ஆகிவிட்டார். இன்றும் அவர் நடிப்பில் வந்த “எது சுகம் சுகம்” பாடல் ஒளிபரப்பானால் பல 90ஸ் இளசுகள் பார்க்க தவறுவது இல்லை.

sivaranjini

sivaranjini

சுகன்யா: பாரதிராஜாவால் பல நாயகிகள் தமிழில் அறிமுகமானார்கள். அதில் முக்கியமானவர் சுகன்யா. ஓரளவுக்கு பெரிய நடிகர்களுடன் நடித்துவிட்டு சுகன்யா, தனக்கென ஒரு குறுகிய காலத்தை தமிழ் சினிமாவில் வைத்திருந்தார். புதுநெல்லு புது நாத்து, சின்ன கௌண்டர், சின்னமாப்பிள்ளை போன்ற படங்கள் நன்றாக போனாலும் அவரால் தொடர்ந்து முன்னணியில் நிலைக்க இயலவில்லை. காரணம் அவ்வபோது பல தோல்வி படங்களும் வந்து ராசி இல்லாதவர் என்ற முத்திரை விழுந்தது.

நக்மா: சூப்பர் ஸ்டாருடன் பாட்ஸா படத்தில் நடித்த போதும் நக்மா சில படங்களுக்கு பிறகு காணாமல் போனார். அவர் நடித்த காதலன், மேட்டுக்குடி போன்ற படங்கள் ஹிட் தான். ஆனால் பிரபுதேவா, சரத்குமார் என்று இருவருடன் காதல் கிசு கிசுவில் சிக்கி அவர்களுடன் லிவிங் டுகெதர்-ல் இருந்ததாக சொல்ல பட்டது. வாய்ப்புகளும் குறைந்தன. பாவம் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் பல இளசுகளை தவிக்க விட்டு தற்போது அரசியலில் இருக்கிறார் அம்மணி.

சௌந்தர்யா: பெயருக்கு ஏற்றது போலவே, சௌந்தர்யமான நடிகையாக பொன்னுமணி படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு தெலுங்கு, தமிழ் என்று நடித்து புகழ் பெற்றார். யாருக்கும் எளிதில் அமையாத ரஜியினியுடன் இரண்டு படங்கள் நடித்தார். ஆனாலும் இவருக்கு பெயர் கிடைக்கவில்லை. ரம்யா கிருஷ்ணனுக்கு தான் அந்த படத்தில் பெயர் கிடைத்தது. அவரது கெட்ட நேரம், விமான விபத்தில் இறந்தும் போனார்.

கஸ்தூரி: இன்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கவர்ச்சி நாயகி கஸ்தூரி, தைரியமான கருத்துக்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டாதவர். இவர் நடித்த சின்னவர், மிகப்பெரும் ஹிட். ஆனாலும் தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் மண்ணை கவ்வின. இந்தியன் படத்தில் நடித்தது மூலம் இவர் தங்கை மெடீரியல் ஆகிப்போனார். பின்னர் திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்தவர், தற்போது வாயாடியாக இருக்கிறார் சமூக வலை தளங்களில்.

வினோதினி: வண்ண வண்ண பூக்கள் படம் மூலம் நாயகியாக அறிமுமானார் வினோதினி. முதல் படமே வெற்றிப்படம். அதிலும் அந்த படம் முழுக்க வெறும் சட்டை மட்டுமே போட்டபடி கவர்ச்சியாக நடித்திருப்பார். அப்போது அதற்காக ஜொள்ளுவிட்டு தியேட்டரில் அந்த படத்தை பலமுறை பார்த்தவர்கள் ஏராளம். விநோதினியோ அந்த படத்திற்கு பிறகு பெரிதாக வர இயலாமல் சீக்கிரமே ஒதுங்கிவிட்டார்.

Continue Reading
To Top