Connect with us
Cinemapettai

Cinemapettai

venkat-prabhu-manadu-starts

Tamil Cinema News | சினிமா செய்திகள்

90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விஜே திடீர் மரணம்.. ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த வெங்கட் பிரபு

90களில் மிகவும் பிரபலமான விஜேவாக இருந்தவர் தான் ஆனந்த கண்ணன். இவர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விஜேவும்கூட. வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஆனந்த கண்ணன், சன். டி.வி.யில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் நாயகனாக நடித்தார். இதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

நீண்ட காலமாக மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த விஜே ஆனந்த கண்ணன் திடீரென மரணம் அடைந்துவிட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜேவாக பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைகாட்சி மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கும், தொகுத்து வழங்கும் பாணிக்கும் தனி ரசிகர் கூட்டம் உருவானது. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக தொலைகாட்சிகளில் தலைகாட்டாமல் இருந்துவந்த ஆனந்த கண்ணன் சமீபத்தில் பிரபல தொலைகாட்சி ஒன்றில் தொகுப்பாளராக ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆனந்த கண்ணன் நேற்று நள்ளிரவில் காலமானார்.

vj-kannan

vj-kannan

இயக்குநர் வெங்கட் பிரபுவின் நல்ல நண்பரான ஆனந்த கண்ணன் அவர் இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸாக நடித்திருந்தார். தனது நல்ல நண்பர் மறைந்து விட்டார் என்கிற செய்தியை இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் போட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபுவின் ட்வீட்டை பார்த்த மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் ஆனந்த கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top