புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நாயகன் மீண்டும் வரார்.. 19 வருடங்களுக்கு பிறகு வரும் சக்திமான், 90ஸ் கிட்ஸ் ரெடியா மக்கா

Shaktiman: 90ஸ் கிட்ஸ்களின் காலம் ஒரு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். அது இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லை என்றாலும் அதுதான் உண்மை. அப்போதைய காலகட்டத்தில் ஒளிபரப்பான டிவி நிகழ்ச்சிகள் இப்போதும் கூட மறக்க முடியாதது.

அதில் சிறியவர்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்த சீரியல்தான் சக்திமான். குழந்தைகள் சக்திமான் ஸ்டிக்கரை வாங்கி வீடு முழுவதும் ஒட்டி அழகு பார்த்த சம்பவங்களும் உண்டு.

இன்னும் சில பிள்ளைகள் அவரைப் போலவே மேஜிக் செய்கிறேன் என்று சில விஷப்பரிட்சையிலும் இறங்கி இருக்கின்றனர். ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் மக்களை கவர்ந்த முதல் சூப்பர் ஹீரோ சக்திமான் தான்.

மீண்டும் வரப்போகும் சக்திமான்

இப்போது ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட்மேன் என எத்தனை பேர் வந்தாலும் சக்திமானுக்கு ஈடு கிடையாது. இப்படி 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோவாக இருந்த சக்திமான் மீண்டும் வரப்போகிறார்.

அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்த முகேஷ் கண்ணா இந்த மகிழ்ச்சியான செய்தியை வீடியோ மூலம் தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் கூட அவர் இந்த தொடர் வரவேண்டும் என பல பேர் கேட்டு வந்தனர். எனக்கும் கூட இதில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

இன்றைய தலைமுறையினரிடமும் இந்த தொடர் சென்று சேர வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சக்திமான் வரப்போகிறார். அது தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஆனால் இது சீரியலாக டிவியில் ஒளிபரப்பாகுமா அல்லது தொடராக ஓடிடி தளத்தில் வெளியாகுமா என அறிவிக்கப்படவில்லை. ஆனால் மூன்று சீசன்களாக வெப் தொடராக வெளிவருவதற்கு தான் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். ஆக மொத்தம் சக்திமானை வரவேற்க நைட்டீஸ் கிட்ஸ் தயாராகி விட்டனர்.

- Advertisement -

Trending News