பிரேக் தேவைப்பட்டதால் படத்தில் நடிக்கவில்லை.. வாய்ப்பில்லாததை புளுகி சமாளித்த 2 ஹீரோக்கள்

பொதுவாக ஹீரோயின்களுக்கு மார்க்கெட் கம்மி ஆகிவிட்டால் உடனே அக்கா, அம்மா, அண்ணி, போன்ற வேடங்களை ஏற்று நடித்துவிடுகின்றனர். இல்லையென்றால் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்து விடுகின்றனர். ஆனால் நடிகர்களுக்கு அப்படி வாய்ப்புகள் அமைவது இல்லை.

சினிமாவில் எப்போதுமே வெற்றி மட்டுமே கிடைத்து விடுவதில்லை. பல ஏற்றதாழ்வுகள் கடந்து தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் சில நடிகர்கள் இது போன்று மார்க்கெட்டை தவறவிட்டாலும், மீண்டும் விடா முயற்சி செய்து வெற்றியடைகின்றனர். 90ஸ் ஹீரோக்கள் இரண்டு பேர் வாய்ப்பு இல்லாததை கூட பிரேக் எடுத்ததாக பேசி சமாளித்து வருகின்றனர்.

Also Read: இப்போதுள்ள ஹீரோயின்கள் கூட ஜொள்ளுவிடும் 90’s ஹீரோக்கள்.. ராம்கி ஹேர் ஸ்டைலை இன்றும் மறக்காத குஷ்பூ

‘நவரச நாயகன்’ கார்த்திக்: கார்த்திக் 90ஸ் காலத்தில் காதல் இளவரசனாக வலம் வந்தவர். கார்த்திக்கு பெண் ரசிகைகள் அதிகம் இருந்தனர். அந்த காலத்தில் இருந்த நடிகைகள் கூட கார்த்திக்குடன் படம் பண்ண ஏங்கி கொண்டிருந்தனர். காதல் மற்றும் கிராமப்புற படங்களில் நடித்து வெற்றி கண்டவர் கார்த்திக். அக்னி நட்சத்திரம், மௌன ராகம், வருஷம் பதினாறு போன்றவை கார்திக்குக்கு மிகப்பெரிய ஹிட் படங்கள்.

பிறகு 2000 வருஷத்தின் தொடக்கத்தில் கார்த்திக் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சந்தித்த வேளை போன்ற வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும் அதன் பின்னர் இவருடைய மார்க்கெட் இறங்கிவிட்டது. குஸ்தி, சந்துரு போன்ற படங்கள் தோல்வியடைந்தன. அதன் பின்னர் இவர் கம்பேக் கொடுத்த படம் தான் அனேகன். கார்த்திக் இந்த நீண்ட இடைவெளியை தான் பிரேக்கில் இருந்ததாக சொல்லி கொள்கிறார்.

Also Read: பல நடிகைகளை பதம் பார்த்த நவரச நாயகன்.. நாக்கில் நரம்பில்லாமல் பேசிய பிரபலம்

 ‘மைக்’ மோகன்: ஒரு காலத்தில் உலக நாயகன் கமலுக்கு போட்டியாக களம் இறக்கப்பட்டவர் தான் மோகன். கிட்டத்தட்ட 26 படங்களில் இவர் மைக்கில் பாடுவது போல் காட்சிகள் வந்ததால் இவரை எல்லோரும் மைக் மோகன் என்று சொல்லுவார்கள். மௌன ராகம், மெல்ல திறந்தது கதவு, பாடு நிலாவே என இவரது நிறைய படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன.

மோகனுக்கும் அவருக்கு டப்பிங் கொடுத்த சுரேந்தருக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாடு காரணமாக மோகன் அவருடைய சொந்த குரலில் அடுத்தடுத்த படங்களுக்கு டப்பிங் செய்தார். இதுவும் அவருடைய தோல்விக்கு காரணம் என்கிறார்கள். வெற்றி நாயகனாக வலம் வந்த மோகன் கம்பேக்கிற்கு ஒரு நல்ல படம் கிடைக்காமல் தவித்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் இவர் தான் பிரேக்கில் இருப்பதாகவே வெளியில் சொல்லி கொள்கிறார்.

Also Read: ஹிந்தி படம் நடிக்க போனதால் கமலுக்கு வந்த நிலைமை.. புகழை மட்டுமல்லாமல் நடிகையையும் தூக்கிய நாயகன்

Next Story

- Advertisement -