Tamil Nadu | தமிழ் நாடு
90% நுரையீரல் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளை பூரண குணம் அடையச் செய்த ஓமந்தூரார் அரசு மருத்துவர்கள்!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா தோற்று பரவி வரும் நிலையில், தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
தற்போது கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதால் நடமாடும் பரிசோதனை வாகனங்களின் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு நோயாளிகளை உடனுக்குடன் கண்டறிந்து, அவர்களை அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தோற்றால், நுரையீரல் தோற்று அதிகம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த ஜூன் 23-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மூதாட்டி முனியம்மாள், கொரோனா தோற்றால் 90% நுரையீரல் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உயிர்காக்கும் உபகரணங்கள் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் மூலமாக 90 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
அதேபோல் கொரோனா தோற்றால் 80% நுரையீரல் தோற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐயப்பன் என்பவர் தற்போது 80 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் உயர்தர சிகிச்சை வழங்கிய ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கும், தமிழக அரசிற்கும் இருவரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இது போன்ற செய்தியை கேட்பதால், பெரும் அச்சத்தில் இருக்கும் மக்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் சிகிச்சை பெற்று குணம் அடைந்து விடலாம்! என்ற நம்பிக்கை அளிக்கக்கூடிய எண்ணம் மக்களிடையே எழ தொடங்கியுள்ளது.
