நிஜ கதையை வைத்து சம்பவம் செஞ்ச இயக்குனர்களின் 9 படங்கள்.. தங்கலானுக்கு உயிர் கொடுத்த விக்ரம்!

Vikram: சினிமாவில் நிஜத்தில் நடந்த உண்மை கதையை படமாக எடுத்து வெற்றி கண்டுள்ளனர். சில காலங்களில் நடந்த நிகழ்வுகள் அல்லது ஒரு தனி நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு சில படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.

அவ்வாறு உள்ள ஒன்பது படங்களை இந்த பதிவில் பார்க்கலாம். பா ரஞ்சித்தின் இயக்கத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது தங்கலான் படம். விக்ரம் இந்தப் படத்திற்காக உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்.

கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தங்கலான் படம் எடுக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் பெரியார் வெற்றி பெற்ற படம் விசாரணை.

இந்தப் படம் போலீஸ் கஸ்டடியில் இறந்த ஆட்டோ டிரைவர் எம் சந்திரகுமாரின் கதையை மையமாக வைத்த எடுக்கப்பட்டிருந்தது. விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படமும் உண்மையாக நடந்த கதைதான்.

நிஜ கதையை கொண்டு எடுக்கப்பட்ட 9 படங்கள்

சில நேரங்களில் மட்டும் சுயநினைவை விளக்கும் இந்த கதாபாத்திரம் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் வாழ்க்கையில் நடந்ததாகும். எச் வினோத் மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் பவீரா வழக்கில் நடந்த உண்மை கதை ஆகும்.

தமன்னா நடிப்பில் வெளியான கல்லூரி படத்தில் இடம் பெற்ற பஸ் எரிப்பு சம்பவம் தர்மபுரி உண்மையாக நடை பெற்றிருந்தது. சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஜெய் பீம் படம் பழங்குடி மக்கள் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான காதல் படம் உண்மையான இரண்டு காதலர்கள் கதையை இயக்குனர் இயக்கியிருந்தார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படமும் நிஜ வாழ்வில் நடந்த கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

மேலும் ஒரு தந்தை மற்றும் ஆட்டிசம் குறைபாடு கொண்ட அவரது மகன் அர்ஜுரிங் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ஹரிதாஸ். இந்த படத்தில் சினேகா மற்றும் கிஷோர் நடித்திருந்தனர்.

தங்கலானாக ஜொலிக்கும் விக்ரம்

Next Story

- Advertisement -