எதிர்பாராத 9 நிகழ்வுகள்.. உலக கிரிக்கெட் வரலாற்றில் நடைபெற்ற ஆச்சரியமான சம்பவங்கள்.!

1. ராகுல் டிராவிட் – சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்றால், கடவுளின் தூதர் ராகுல் டிராவிட். டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தை நீண்ட ஆண்டுகளாக தக்க வைத்தவர். நமது இந்திய அணியின் சுவர் என்று போற்றக்கூடியவர் ராகுல் டிராவிட். ஆனால் இவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை, அதாவது 55 முறை பௌவுல்டு அவுட் மூலம் தனது விக்கெட்டை இழந்திருக்கிறார்.

Dravid-Cinemapettai-1.jpg
Dravid-Cinemapettai-1.jpg

2. ஆஸ்திரேலிய அணி – டெஸ்ட் போட்டியில் மூன்று முறை எதிரணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்து தோல்வியைத் தழுவிய அணி என்றால் அது ஆஸ்திரேலிய அணி. இரண்டு முறை இங்கிலாந்து அணியிடமும் மற்றொரு முறை புகழ்வாய்ந்த கொல்கத்தா வெற்றி, இந்தியா அணியிடமும் தோல்வியைத் தழுவியது.

Kolkatta-Cinemapettai.jpg
Kolkatta-Cinemapettai.jpg
Kolkata-Test-Cinemapettai-1.jpg
Kolkata-Test-Cinemapettai-1.jpg

3. சச்சின் டெண்டுல்கர் – டெண்டுல்கர் இரண்டு முறை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பவுலிங்கில், ஆஸ்திரேலிய அணி ஜாம்பவான் ஷேன் வார்னேவை பின்னுக்கு தள்ளி சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அது என்னவென்றால் வார்னே ஒரே ஒருமுறை மட்டுமே 5 விக்கெட்டுகளை 50 ஓவர் போட்டியில் எடுத்துள்ளார். ஆனால் நமது சச்சின் டெண்டுல்கர் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒன்று ஆஸ்திரேலிய அணியிடமும், மற்றொன்று பாகிஸ்தான் அணியிடமும் இச்சாதனையை செய்துள்ளார்.

Sachin-Cinemapettai.jpg
Sachin-Cinemapettai.jpg

4. சனத் ஜெயசூர்யா – ஷேன் வார்னேவை விட ஒருநாள் போட்டிகளில்அதிக விக்கெட்டுகளை எடுத்து ஜெயசூர்யா சாதனை செய்துள்ளார். ஆம் இவர் 323 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் வார்னே தனது கேரியரில் 50 ஓவர் போட்டிகளில் 293 விக்கெட்டுகளை மட்டுமே சாய்த்துள்ளார்.

Jeyasuriya-Cinemapettai.jpg
Jeyasuriya-Cinemapettai.jpg

5. முத்தையா முரளிதரன்  – முரளிதரன் என்றால் பவுலிங் சாதனை அல்ல இவர் பேட்டிங்கிலும் ஒரு சாதனையை செய்துள்ளார். ஆம் மூன்று விதமான போட்டிகளையும் சேர்த்து 118 முறை அவுட்டாகாமல் களத்தில் நின்ற பெருமையை இவர் தன்னிடம் வைத்துள்ளார்.

Muralitharan-Cinemapettai.jpg
Muralitharan-Cinemapettai.jpg

6. ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்விங் பவுலர் என்றால் நம் நினைவுக்கு வருவது இங்கிலாந்தைச் சேர்ந்த ஆண்டர்சன் மட்டுமே, ஆனால் இவர் ஒரே ஓவரில் 28 ரன்களை கொடுத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை கொடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆஷஸ் தொடரில் ஜார்ஜ் பெய்லி இவர் ஓவரில் 28 ரன்கள் குவித்தார்.

James-Cinemapettai.jpg
James-Cinemapettai.jpg

7. வாசிம் அக்ரம் – ஒருமுறை ஜிம்பாவே அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, வாசிம் அக்ரமும், ஷாக்குலின் முஷ்தகும் 313 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 8வது விக்கெட்டுக்கு சாதனை படைத்தனர். வாசிம் அக்ரம் அதிரடியாக ஆடி 257 ரன்கள் எடுத்தார்.

Akram-Cinemapettai.jpg
Akram-Cinemapettai.jpg

8. அஜித் அகர்கர் – பாம்பே டக் என்ற பெயருக்கு சொந்தக்காரர் அஜித் அகர்கர். இவர் தொடர்ச்சியாக 7 முறை டக் அவுட் ஆனதற்கு அந்தப் பெயரை பெற்றார். இவர் ஒருமுறை ஜிம்பாவே அணிக்கு எதிராக 4 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 21 பந்துகளுக்கு 50 ரன்களை அடித்து சாதனை செய்துள்ளார்.

Agarkar-Cinemapettai.jpg
Agarkar-Cinemapettai.jpg

9. மிஸ்பா உல் ஹக் – பாகிஸ்தான் அணியில் ஆமை வேக மட்டையாளர் என பெயரெடுத்தவர் மிஸ்பா உல் ஹக். ஆனால் இவர் டெஸ்ட் போட்டிகளில் 56 பந்துகளுக்கு சதமடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அதுவே முதல் சாதனையாக இருந்தது பின் நியூசிலாந்தை சேர்ந்த பிரண்டன் மெக்கல்லம் 54 பந்துகளுக்கு சதமடித்தார்.

Misbah-ul-haq-Cinemapettai.jpg
Misbah-ul-haq-Cinemapettai.jpg