India | இந்தியா
இந்த மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை.. அலறி அடித்து பணத்தை எடுக்க ஓடும் மக்கள்
வங்கிகளுக்கு இந்த மாதம் மட்டும் 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதனால் முன்கூட்டியே வங்கி வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்தினால் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்கலாம்.
இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது அதிலும் வங்கி ஊழியர்களுக்கு இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் விடுமுறை நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தில் 14ஆம் தேதி மட்டும் 28-ஆம் தேதிகளில் சனிக்கிழமை விடுமுறை, 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை இதுபோக பாக்ஸிங் விடுமுறை என்று தெரிவித்துள்ளனர். ஆகையால் மொத்தமாக விடுமுறை நாட்கள் இந்த மாதத்தில் மட்டும் 9 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாக்சிங் விடுமுறை மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை ஆகையால் 8 நாட்கள் விடுமுறை உறுதியாகிவிட்டது. மக்கள் இதற்கு ஏற்றபடி திட்டமிட்டு தங்களது வங்கி வேலைகளை முடித்து விடுங்கள்.
