கூடுதல் கவர்ச்சிக்கு உதடு, இடுப்பை அறுவை சிகிச்சை செய்த 9 நடிகைகள்.. நயன்தாரா முதல் சமந்தா வரை

சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்றால் நடிப்பது, நடனமாடுவது மட்டுமின்றி தங்களின் லுக் கவர்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம் .ஏனென்றால் அப்போதுதான் படவாய்ப்புகளும் அவர்களைத் தேடி வரும். இதற்காக சில நடிகைகள் தங்களின் லுக்கை மேம்படுத்திக்கொள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கவர்ச்சியான உடல் மற்றும் முகம் பாவனையாக மாற்றிக் கொள்கின்றனர்.

நயன்தாரா:  தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழும் நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அவர் ஐயா படத்தில் இருந்த முகத்திற்கும் தற்போது இருக்கும் தோற்றத்திற்கும் முற்றிலும் மாறுபட்ட வேறுபாடு இருக்கும். இதற்காக நயன்தாரா உதட்டில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

சமந்தா: தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஆக வலம் வரும் நடிகை சமந்தா, ஆரம்ப காலத்தில் நடித்த படங்களை விட 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு வெளியாகும் படங்களில் கவர்ச்சி தூக்கலாக நடிகையாக மாறி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இதற்கு காரணம் அவர் செய்த அறுவை சிகிச்சைதான். இவர் தனது உதட்டில் அறுவை சிகிச்சை செய்து பளபளப்பான உதடாக மாற்றியுள்ளார்.

samantha09-cinemapettai
samantha-cinemapettai

ஸ்ருதிஹாசன்: உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவர் திரையுலகிற்கு அறிமுகமாவதற்கு முன்பே மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இதை அவரே தனது சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டு ஒத்துக்கொண்டார்.

sruhihasan-cinemapettai
shruti-hassan-cinemapettai

ஸ்ரேயா: தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என பிற மொழிப் படங்களிலும் நடித்து திரையுலகை கலக்கிக் கொண்டிருந்த இவரும் உதட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தன்னுடைய அழகை மேம்படுத்தினார்.

காஜல் அகர்வால்: தமிழ், தெலுங்கு திரையுலகில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த காஜல்அகர்வால், தன்னுடைய அழகை மேம்படுத்திக் கொள்ள மூக்கில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

தமன்னா: இவர் நடித்த ஆரம்பகால படங்களின் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றார். இவர் கூடுதல் கவர்ச்சி காட்ட உதட்டில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

thamanna-cinemapettai
tamannaah-cinemapettai

சமீரா ரெட்டி: இவர் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சி குறையாமல் நடிப்பார். இவர் இடுப்புப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது லுக்கை மாற்றியுள்ளார்.

ரம்பா: தொடை அழகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்த ரம்பா, மூக்கு மற்றும் உதடு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கவர்ச்சியான உடலமைப்பை பெற்று, அவர் நடித்த காலக்கட்டத்தில் டாப் கதாநாயகியாக வலம் வந்தார்.

பிரியாமணி: இவர் பருத்திவீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இவரும் கூடுதல் அழகு பெறுவதற்காக உதட்டில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

இவ்வாறு நடிகைகள் அழகிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு தங்களது முகங்களில் உள்ள பாகங்களை தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்து மார்க்கெட்டை பிடித்திருக்கின்றனர். அதிலும் பெரும்பாலான நடிகைகள் உதட்டிலேயே அறுவை சிகிச்சையை மேற்கொண்டு தங்களது அழகை மேம்படுத்தி உள்ளனர்.

Next Story

- Advertisement -