Connect with us

உலக அளவில் 86வது இடத்தைப் பிடித்த ஒரே நிறுவனம்..! உப்பு முதல் மென்பொருள் வரை சாதனை!

India | இந்தியா

உலக அளவில் 86வது இடத்தைப் பிடித்த ஒரே நிறுவனம்..! உப்பு முதல் மென்பொருள் வரை சாதனை!

டாடா நிறுவனம் உலக அளவில் உப்பு முதல் மென்பொருள் வரை சாதனை படைத்து வருகிறது..

கடந்த 2018 ஆம் ஆண்டு 104 ஆவது இடத்தில் இருந்த டாடா நிறுவனம் தற்போது 86 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பிராண்ட் ஃபைனான்ஸ் தனது 2019 ஆய்வறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் டாடா நிறுவனம் 37% உற்பத்தியை அதிகரித்து 19.5 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முதல் பிராண்டாக டாடா நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

டாட்டா சன்ஸ் தலைவரான என்.சந்திரசேகரன் தங்களுக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தின் மூலம் மக்களுக்கு இன்னும் அதிக சமூகப் பொறுப்புடன் வேலை பார்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top