பிக்பாஸ் சீசன்5ல் கலந்து கொள்ளும் 80’s கதாநாயகன்! அவரே உறுதிப்படுத்திய பதிவு!

அனுதினமும் சுவாரசியம் குறையாமலும் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக விளங்கும் பிக்பாஸ் விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடையே சிறந்த என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக மாறிவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ளது. எனவே இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் சமூகவலைதளங்களில் ஆர்வத்துடன் பகிரப்பட்டு வருகிறது. எனவே இந்த சீசனில் சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, கோபிநாத் ரவி, பவானி ரெட்டி, சூசன், திருநங்கை மாடல் அழகி நமிதா மாரிமுத்து, இமான் அண்ணாச்சி ஆகியோர் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் பிக்பாஸில் கலந்துகொள்ளும் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வகையில் குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர் கனி, ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, சுனிதா, பாபா பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் கசிகிறது.

சரியான போட்டியாளர்கள் அமையவில்லை என்பதால் விஜய் டிவி பிரபலங்களை வைத்து இந்த நிகழ்ச்சியை முடித்து விடலாம் என்று பக்கா பிளான் போட்டு உள்ளது விஜய் டிவி. இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

nizhalgal ravi
nizhalgal ravi

தற்போது 80களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் கலக்கிக் கொண்டிருந்த நிழல்கள் ரவி பிக் பாஸ் சீசன் 5ல் களமிறங்க உள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது பிக்பாஸி இருந்து அழைப்பு வந்தது உண்மைதான். நான் கலந்து கொள்ள போகிறேனா இல்லையா என்பது சஸ்பென்ஸ். அதை வெளியில் செல்லக்கூடாது என்று சொல்லி இருக்காங்க’ என நிழல்கள் ரவி கூறியுள்ளார்.

எனவே இவர் சொல்வதைப் பார்த்தால் நிழல்கள் ரவி பிக்பாஸில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் யார் யார் பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி தனது ட்விட்டரில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்