fbpx
Connect with us

“விஜய் 61” படத்தில் 80களில் நடக்கும் ப்ளாஸ்பேக்

“விஜய் 61” படத்தில் 80களில் நடக்கும் ப்ளாஸ்பேக்

“தெறி” படத்தின் கூட்டணியான விஜய்யும், இயக்குநர் அட்லீயும் தற்போது “விஜய் 61” படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இயங்கி வருகின்றனர். சென்னை ஈசிஆரில் உள்ள ஸ்டுடியோவில் திருவிழா நடப்பது போன்ற செட்டப்புடன் கோவில் செட் ஒன்று போடப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக விஜய்யின் அதிரடி நடனத்தில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதோடு, அதற்கு முன்னதாக, காதல் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாம். முதல் ஷெட்யூலுக்கான படப்பிடிப்பு இந்த செட்டிலேயே இன்னும் சில நாட்கள் தொடரும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மார்ச் இரண்டாவது வாரத்தில் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பைத் துவக்க திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குனர் அட்லி.

இரண்டாவது ஷெட்யூலில் எண்பதுகளில் நடப்பது போன்ற காட்சியமைப்புகள் கொண்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. 80 களை கண்முன் கொண்டுவருவது போன்ற செட் கலை இயக்குனர் முத்துராஜ் கைவண்ணத்தில் உருவாக்கப்படுகிறதாம். இந்த செட்டில் நடைபெறும் படப்பிடிப்பில்தான் விஜய் நித்யா மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்த செட்டிலும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாக சொல்கின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top