Tamil Nadu | தமிழ் நாடு
சென்னை – தூத்துக்குடி இடையிலான 8 வழி சாலை..13,500 கோடி செலவில் மத்திய அரசு ஒப்புதல்..

சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 8 வழி சாலை மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் 13,500 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தூத்துக்குடி இடையிலான 8 வழி சாலைக்கான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மக்கள் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்தச் சாலை மூன்று விதமாக போடப்பட உள்ளது அதுவும் முக்கியமாக சென்னை விழுப்புரம் வரை 10 வழி சாலையாக அமைக்கப்பட உள்ளது. விழுப்புரம் ,தஞ்சாவூர் மற்றும் திருச்சி வரை 8 வழி சாலை போடப்பட உள்ளது. திருச்சி முதல் தூத்துக்குடி வரை ஆறு வழி சாலை போடப்படுகிறது.
இது மத்திய அரசு திட்டமிட்டபடி செயல்படுத்தும் என்பதால் இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்த சாலை 650 முதல் 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை சென்னை, பண்ருட்டி, விழுப்புரம் விருத்தாசலம், அரியலூர் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை ஆகிய பகுதிகளில் வழியாக போடப்பட்டு தூத்துக்குடியை சென்றடைகிறது. இந்த சாலையின் மூலம் 100 கிலோ மீட்டர் தூரம் மொத்த பயண தூரத்தில் இருந்து குறையும் என்று கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்னவென்றால் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதால் இதற்கான எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகள் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசு இதற்கான ஒப்புதலை செயல்படுத்துமா அல்லது மக்களுடன் சேர்ந்து போராடுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
