Tamil Cinema News | சினிமா செய்திகள்
“8 தோட்டாக்கள்” ஹீரோ வெற்றி நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் பட தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே !

அறிமுக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘8 தோட்டாக்கள்’. அறிமுக நடிகர் வெற்றி கதாநாயகனாக, அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருந்தனர். எம்.எஸ்.பாஸ்கர் வித்யாசமான மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ஹீரோவுக்கு நல்ல ரீச் ஏற்படுத்தி கொடுத்தது. இவர் நடிக்கும் இரண்டாவது படத்தை பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.
ஜீவி
8 தோட்டாக்கள் படத்தை தயாரித்த வெற்றிவேல் சரவணா சினிமாஸ் மற்றும் ‘பிக் பிரின்ட் பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
படத்தின் கதை, வசனத்தை பாபு தமிழ் எழுதியுள்ளார், அறிமுக இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இயக்குகிறார். வெற்றிக்கு ஜோடியாக மோனிகா சின்னகோட்லா மற்றும் அஸ்வினி சந்திரசேகர் நடிக்கின்றனர். படத்தில் முக்கிய ரோல்களில் கருணாகரன், ரோகினி, மைம் கோபி நடிக்கவுள்ளார்கள்.
கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை. கே.எல்.பிரவீன் எடிட்டிங் , கலை இயக்கத்தை வைரபாலன் கவனிக்கவுள்ளார். பிரதானமாக சென்னையிலும், ஒரு சில பகுதிகள் தேனியிலும் சுட செய்யவுள்ளனர். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
