தூங்காமல் கிறுக்கு பிடிக்க வைத்த 8 காதல் படங்கள்.. ஃபேர் & லவ்லி, பௌடரோடு சுற்றிய இளசுகள்

தமிழ் சினிமாவில் எப்போதும் காதல் திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெறும். தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித் ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தனர். அவ்வாறு இளைஞர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற 8 காதல் படங்களை பார்க்கலாம்.

ஆட்டோகிராஃப்: சேரன் தயாரித்து, இயக்கி, நடித்த படம் ஆட்டோகிராஃப். இப்படத்தில் சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா ஆகியோர் நடித்திருந்தனர். பள்ளி மற்றும் கல்லூரியில் ஏற்பட்ட காதலையும், அதன்பின் காதலை இழந்த வலியையும் உணர்வுபூர்வமாக சொல்லியிருந்த படம் ஆட்டோகிராஃப். இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

காதல் கோட்டை: அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் காதல் கோட்டை. அகத்தியன் இப்படத்தை இயக்கியிருந்தார். அஜித்துக்கு ஜோடியாக தேவயானி காதல் கோட்டை படத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமா முதல் முறையாக பார்க்காமலேயே காதல் என்ற புதிய கதை என் மூலம் ரசிகர்களை கவர்ந்த படம்.

குஷி: எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி. கல்லூரியில் படிக்கும் இருவரின் காதல் ஈகோ காரணமாக வெளிப்படையாக சொல்லாமல் இருப்பார்கள். பிறகு இருவரும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது குஷி. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போதும் தொலைக்காட்சியில் எத்தனை முறை போட்டாலும் ரசிகர்கள் திரும்ப பார்க்கும் படம் குஷி.

ராஜா ராணி: அட்லி இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜா ராணி. காதலித்த இரு ஜோடிகள் ஏதோ ஒரு காரணத்தினால் சேர முடியாமல் போகிறது. காதல் தோல்விக்கு பிறகும் வாழ்க்கையும் இருக்கும், அதில் காதலும் இருக்கும் என்பதை உணர்த்திய படம் ராஜா ராணி.

சில்லுனு ஒரு காதல்: சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். சந்தோசமாக வாழும் தம்பதிகள் திருமணத்திற்கு முன்பு கணவனின் கடந்தகால காதல் மனைவிக்கு தெரிந்த பிறகு அதை எப்படி புரிந்து கொள்கிறார் என்பதே சில்லுனு ஒரு காதல் படத்தின் கதை. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மதராசபட்டினம்: ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா, ஏமிஜாக்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மதராசபட்டினம். சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய காதல் கதை மதராசபட்டினம். ஆங்கிலேய கவர்னரின் மகளுக்கு சலவைத் தொழிலாளியாக இருக்கும் ஆர்யா மீது காதல். பிறகு லண்டனில் இருந்து 60 ஆண்டுகளுக்கு பிறகு காதலனை தேடி இந்தியா வருகிறார் ஏமிஜாக்சன். இந்த உணர்வுபூர்வமான காதல் கதை மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஓ காதல் கண்மணி: மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கண்மணி. ஆண், பெண் இருவரும் திருமணம் ஆகாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறையில் வாழ்வது நிஜத்தில் எப்படி சாத்தியமானது என்பதே ஓ காதல் கண்மணி.

96: பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. பள்ளிப்பருவ காதலை நினைத்து இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ஜானகியை நினைத்துக்கொண்டிருக்கும் ராமச்சந்திரன். சிங்கப்பூரில் திருமணமாகி செட்டில் ஆன ஜானகி. இவர்கள் இருவரும் 22 வருடம் கழித்து சந்தித்த போதும் இவர்களுக்குள் இருக்கும் காதல் அப்படியே இருக்கிறது.

Next Story

- Advertisement -