200 நாட்களுக்கு மேல் தியேட்டரில் கொடி கட்டி பறந்த ரஜினியின் 8 படங்கள்.. சூப்பர் ஸ்டாருக்கு போட்டி இவரே தான்

Actor Rajini: எந்த ஒரு விஷயமும் ஈசியாக யாருக்கும் கிடைத்திடாது. ஒரு விஷயத்தை அடைய வேண்டும் என்றால் அதற்கு பல போராட்டங்களை சந்தித்த பிறகு தான் அதனுடைய வெற்றியை முழுமையாக ருசிக்க முடியும். அந்த வகையில் ரஜினி கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமாவில் போராடி 72 வயதிலும் ஹீரோ என்ற இமேஜுடன் வலம் வருகிறார்.

இதற்கு இடையில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை இவருடைய கேரியரில் பார்த்திருப்பார். அதையெல்லாம் படிக் கற்களாக தாண்டி வெற்றியை மற்றும் நோக்கி பயணித்து வருகிறார். அந்த வகையில் இவர் இதுவரை நடித்த நிறைய படங்கள் அதிகமான லாபத்தையும் அதிக அளவில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அப்படி இவர் நடிப்பில் வெளியாகி 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய எட்டு படங்களை பற்றி பார்க்கலாம்.

Also read: கடைசி மூச்சு இருக்க வர நடிச்சுக்கிட்டே தான் இருப்பேன்.. ரஜினிக்கு வரிசை கட்டி நிற்கும் 10 படங்கள்

அதில் பாரதிராஜா இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே திரைப்படம் வெற்றிகரமாக ஓடி 200 நாட்களை தாண்டி இருக்கிறது. அடுத்ததாக இவருடைய கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாஸாக காட்டிய படம் என்றால் அது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா திரைப்படம். இப்படம் 260 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது.

மேலும் போலீஸ் கதாபாத்திரத்துக்கு சவால் விடும் விதமாக தத்ரூபமாக நடித்துக் காட்டிய படம் தான் மூன்று முகம். 1982 ஆம் ஆண்டு வெளிவந்து 225 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. அடுத்ததாக பி வாசு இயக்கத்தில் முதன்முதலாக கூட்டணி வைத்த படம் தான் மன்னன். இப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி படமாக 301 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்திருக்கிறது.

Also read: ரஜினியை வைத்து விஜய்க்கு பதிலடி கொடுத்து எஸ்ஏசி.. வந்த வழி மறந்தோம்னா காணாம போயிடுவோம்

இதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு கேங்ஸ்டர் படமாக வந்து ஹிட் கொடுத்தது பாட்ஷா. இப்படம் 368 நாட்கள் ஓடி மிகப் பெரிய சாதனை படமாக இடம் பிடித்திருக்கிறது. அடுத்ததாக கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மிகப்பெரிய பிரம்மாண்டமான வெற்றிய ருசித்த படம் தான் படையப்பா. இப்படம் 1999 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி 270 நாட்கள் ஓடியது.

அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே திரைப்படம் அருணாச்சலம். இப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்து 204 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் 156 தியேட்டர்களில், 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. அத்துடன் தமிழ் சினிமா வரலாற்றிலேயே 890 நாட்கள் ஓடிய திரைப்படமும் இது மட்டும்தான். இப்படி ரஜினியின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

Also read: 2கே கிட்ஸ் பார்க்க வேண்டிய ரஜினியின் 15 வெற்றி படங்கள்.. தலைவன் நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்து போவீங்க

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்