Connect with us
Cinemapettai

Cinemapettai

73வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி விட்ட சவால் என்ன தெரியுமா? 10 வாரங்களில் பாஜகவின் சாதனை

India | இந்தியா

73வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி விட்ட சவால் என்ன தெரியுமா? 10 வாரங்களில் பாஜகவின் சாதனை

இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி முப்படை தளபதிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு செங்கோட்டையில் கொடியேற்றி வைத்தார்.

கொடி ஏற்றிய பின் மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி 307 சட்டத்தின் தடைக்குப் பின் காஷ்மீர் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். லடாக் பகுதியில் கலைநிகழ்ச்சிகளுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காஷ்மீர் விஷயத்தில் மற்ற நாடுகள்  தலையிடக்கூடாது என்று சவால் விடுத்துள்ளார்.

independanceday

independanceday

பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அரசு,

  1. இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
  2. விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கை, நீர்வளத்தை காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.
  3. காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  4. நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.
  5. தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது சுதந்திர தினம்.
  6. விமானப்படை, கடற்படை, ராணுவத்திற்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார்.
  7. ஜி.எஸ்.டி உள்ளிட்டவை வணிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
  8. வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள்.
  9. கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு.
  10. கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார நிலை 2 ட்ரில்லியன் டாலராக இருந்தது, கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார நிலை 5 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது
  11. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  12. ஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top