Connect with us

Cinemapettai

7 வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பண முதலைகள்.. தடுக்குமா அரசாங்கம்?

black money

Cinema News | சினிமா செய்திகள்

7 வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பண முதலைகள்.. தடுக்குமா அரசாங்கம்?

புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் 200 இடங்களில் ஐடி துறை ரெய்டுகள் நடத்தியுள்லது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.17.2 கோடி மதிப்பிலானவை புதிய ரூ.2000 நோட்டுக்களாகும்.

அரசு அச்சடித்து அனுப்பும் புதிய 2000 நோட்டுக்களை கருப்பு பண முதலைகள் எப்படி பெறுகிறார்கள். தங்கள் கருப்பு பணத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பது குறித்த ஒரு பார்வை இது.

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவல் அடிப்படையில், பண மோசடியின் முக்கியமான 7 வழிமுறைகளை நாம் இதில் தெரிவித்துள்ளோம்.

அடையாள திருட்டு

பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தும்போது பான் கார்டு எண் உள்ளிட்ட அடையாளங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல்களை எடுத்துக் கொண்டு கருப்பு பண முதலைகளின் கணக்கில் வங்கி ஊழியர்கள் டெபாசிட் செய்வது உண்டு. இது சாமானிய மக்களுக்கு தெரியவே வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

ஏடிஎம்கள்

நவம்பர் 8ம் தேதி, பண மதிப்பிழப்பு அறிவிப்பு வந்த பிறகு 50 சதவீத ஏடிஎம்கள் பூட்டிக்கிடக்கின்றன. இந்த ஏடிஎம்களுக்கு செல்ல வேண்டிய புதிய ரூபாய் நோட்டுக்களை வங்கி அதிகாரிகள், செக்யூரிட்டி ஏஜென்சிகள் இணைந்து கொண்டு கருப்பு பண முதலைகளுக்கு கொண்டு சேர்க்கிறார்களாம். எனவேதான் ஏடிஎம்களுக்கு பணம் வருவதில்லை.

ஜன் தன் அக்கவுண்டு

அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது ஜன்தன் கணக்கு. இதில், மத்திய அரசின் பண அறிவிப்புக்கு பிறகு, சுமார் 15 சதவீத வங்கி கணக்குகள் கருப்பு பண சுழற்ச்சிக்கு பயன்பட்டுள்ளன. பெங்களூர் விஜயநகரிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் ஜன்தன் வாடிக்கையாளர் வைத்திருந்த பேலன்ஸ் தொகை 500 ரூபாய். திடீரென அந்த கணக்கில் சமீபத்தில் ரூ.200000 பொத்தென விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை எடுக்க வாடிக்கையாளர் அனுமதிக்கப்படவில்லை.

டிமாண்ட் டிராப்ட் (டி.டி)

பழைய ரூபாய் நோட்டை செலுத்தி டி.டி. எடுத்துவிட வேண்டியது. பிறகு, அதையே ரத்து செய்து புதிய நோட்டாக பெற்றுக்கொள்ள வேண்டியது. 49 ஆயிரத்துக்கு கீழுள்ள டி.டி. ரத்து செய்யப்படும்போது எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை என்பது வசதியாகிவிட்டது.

கமிஷன் அடிப்படையில் பணம்

வங்கி கேஷியர்கள் வாடிக்கையாளர்களிடம் ஆவணமேயின்றி பழைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுக்களை கொடுப்பதும் நடக்கிறது. இதற்காக 25 சதவீதம் அளவுக்கு கமிஷன் பரிமாறப்பட்டுள்ளதாம்.

போலி அக்கவுண்டுகள்

சாமானிய வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வங்கி ஊழியர்களே போலியான அக்கவுண்டுகளை உருவாக்கி அதில் பணக்காரர்களின் பணத்தை செலுத்தி வெள்ளையாக்க உதவியுள்ளனர்

சுய உதவி குழு

சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு வங்கிகள் மூலம் பண மோசடி நடந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெறும் இந்த அமைப்புகள், அதை தாங்கள் டெபாசிட் செய்யும்போது பண முதலைகளின் பழைய ரூபாய் நோட்டுக்களாக டெபாசிட் செய்துள்ளனற். இதற்காக கமிஷன் பெற்றுள்ளனர்.

நாட்டு நிலவரம்

இப்படி பல வகைகளில் கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்படுகிறது. இனியும் மாற்றப்படும். அத்தனையிலுமே வங்கி அல்லது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது. அரசும், அதன் அதிகாரிகளும் ஒரே நோக்கில் பயணித்தால் மட்டுமே நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும், அல்லது அரசோ, அரசியல்வாதிகளோ எதை நினைத்தாலும் அதிகார வர்க்கம் அதை தடுக்க முடியும் என்பதற்கு இந்த பண மதிப்பிழப்பு திட்டம் ஒரு வெளிப்படையான உதாரணம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top