வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

லியோவில் லோகேஷ் சொதப்பிய 7 விஷயங்கள்.. அண்ணன் அண்ணன் சொல்லி இப்படி மண்ணை கவ்வ வச்சிட்டீங்களே

Lokesh spoiled 7 things in leo: ஒட்டுமொத்த ரசிகர்களும் லியோ படத்தை பார்ப்பதற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் நேற்று வெளியான லியோ படம் விஜய்யின் ரசிகர்களை திருப்தி படுத்தி வருகிறது. ஆனாலும் அதிகளவில் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் சற்று ஏமாற்றி இருக்கிறது என்றும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

அதற்குக் காரணம் லோகேஷின் ஓவர் கான்ஃபிடன்ஸ் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதாவது இன்டெர்வலுக்கு முன்னாடி படம் அடி தூள் ஆக பட்டைய கிளப்பி அதிக கைத்தட்டல்களை வாங்கும் படியாக கதை இருக்கிறதாம். ஆனால் இரண்டாம் பாதி அப்படியே உல்டாவாக மாறி இருக்கிறது. அந்த வகையில் லியோ படத்தின் இரண்டாம் பாதியில் லோகேஷ் ஏழு விஷயத்தை சொதப்பி இருக்கிறார்.

அதாவது எதிர்பார்த்த அளவுக்கு முதல் பாதி சூப்பராக இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியை மொத்தமாக சொதப்பிவிட்டு இருக்கிறார். அடுத்ததாக இப்படத்தில் LCU அதிகமாக எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஏதோ பெயருக்கு கொண்டு வந்து கனெக்ட் பண்ண வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டது போல் தெரிகிறதாம்.

அடுத்ததாக வில்லனுக்கு வைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் அந்த அளவிற்கு ஒர்த்தாக இல்லை. எல்லா முக்கியத்துவமும் விஜய்க்கு மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அது பாக்க நன்றாக இருந்தாலும் வில்லன்களை எப்போதுமே ஒரு படி தூக்கலாக காண்பித்தால் மட்டுமே பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். அந்த விஷயத்தில் லோகேஷ் இதைக் கோட்டை விட்டுவிட்டார்.

இதனை அடுத்து பல வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா மற்றும் விஜய்யின் காம்போவை பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்து ஆவலுடன் பார்க்க போனவர்களுக்கு ஏமாற்றமாக தான் இருந்தது. அதாவது இவர்கள் இருவருக்கும் இருக்கும் ரொமான்ஸ் ரொம்பவே மிஸ் ஆகி இருக்கிறதாம். இன்னும் கூட இதை பெஸ்ட்டாக கொண்டு வந்து இருக்கலாம் என்று ரசிகர்கள் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவிக்கிறார்கள்.

அடுத்ததாக ஓவர் சண்டைக் காட்சிகளை காட்டி வன்முறையை தூக்கலாக காட்டப்பட்டு இருக்கிறது. இது பார்ப்பதற்கு போர் அடிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அத்துடன் கடைசி 25 நிமிஷம் காட்சிகள் முழுவதும் சண்டை மட்டுமே இருப்பதால் படத்தைப் பார்த்த ஒரு ஆர்வமே குறைந்து விட்டது போல் இருக்கிறதாம். இப்படி இரண்டாம் பாதியில் சொதப்பும் படியான ஏழு விஷயங்களை செய்து லியோ படத்திற்கு நெகட்டிவாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

Trending News