இந்திய சினிமாவை அவமதித்த தமிழ் சினிமா.. பெரிய முதலைகளால் பாதிக்கப்பட்ட 7 சின்ன பட்ஜெட் படங்கள்

தேசிய சினிமா தினம் கடந்த வெள்ளி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கொரோனா லாக் டவுனுக்கு பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் என்பது வெகுவாகவே குறைந்து விட்டது. மக்களை மீண்டும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க ஊக்குவிக்கும் விதமாகவும், சினிமாவை வாழ வைப்பவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்பட்டது.

நம் நாட்டில் மல்டிப்ளக்ஸ் சினிமா அஸோஸியேஷன் ஒன்று செயல்படுகிறது. அதில் எல்லா மாநிலங்களை சேர்ந்த மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்களும் இருக்கின்றனர். பி வி ஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ், கார்னிவல், டிலைட் போன்ற மல்டிப்ளக்ஸ் நிறுவனங்கள் இந்த கூட்டமைப்பில் இருக்கின்றன.

Also Read: 410 கோடிக்கு விழுந்த அடி.. பிரம்மாஸ்திரம், டிவிட்டர் விமர்சனம்

கொரோனா லாக்டவுனிற்கு பிறகு தியேட்டரில் ஹவுஸ்புல் காட்சிகளே இல்லை, எனவே இந்த அஸோஸியேஷன் தேசிய சினிமா தினத்தன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டன. அதாவது தேசிய சினிமா தினத்தன்று அனைத்து மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலும் எல்லா படத்திற்கும் 75 ருபாய் டிக்கெட் என்று அறிவித்தனர். மொத்தம் 4000 ஸ்க்ரீன்களில் அன்று 75 ருபாய் டிக்கெட்டில் படங்கள் ஓடின.

செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருந்த சினிமா தினம் 23 ஆம் தேதி கொண்டாடபட்டது. நாடு முழுவது 6.5 மில்லயன் மக்கள் தியேட்டர்களுக்கு வந்தனர். பிரம்மாஸ்திரா, ரிவெஞ் த ஆர்ட்டிஸ்ட் , சீதா ராம் போன்ற படங்கள் அன்றைய நாளில் நன்றாக கல்லா கட்டியது.

Also Read: பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த பிரம்மாஸ்திரம்.. வாயடைக்கச் செய்யும் வசூல்

இந்த மல்டிப்ளக்ஸ் சினிமா அஸோஸியேஷனில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட உறுப்பினர்களாக இல்லை. இதனால் தேசிய சினிமா தினம் நம் மாநிலத்தில் கொண்டாடப்படவில்லை. 75 ரூபாய் டிக்கெட் சலுகைகள் எதுவும் இங்கு தரப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ நம் தமிழ் சினிமா தான். அங்கே பிரம்மாஸ்திரா, சீதா ராம் படங்கள் நன்றாக கல்லா காட்டியது போல இங்கேயும் நடந்து இருக்கும். இதனால் மொத்தம் 7 தமிழ் படங்கள் பாதிக்கப்பட்டன. அதில் 2 படங்கள் சிறந்த படங்களாக இருந்தன.

Also Read: ரன்பிர் கபூரின் சூப்பர் நேச்சுரல் படம் பிரமாஸ்திரா லோகோ மக்கள் முன்னிலையில் கும்பமேளாவில் வெளியிடப்பட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்