ஹீரோக்கள் 3 ரோல் பண்ணி சூப்பர் ஹிட் ஆன 7 படங்கள்.. சிவாஜி, ரஜினியை மிஞ்சிய கமல்

7 super hit movies starring heroes with 3 roles: சினிமாவில் முன்னணி நடிகர்கள் சிலர் இரு வேடங்களுக்கு ரிஸ்க் எடுக்க தயங்கும் நிலையில்  மூன்று வேடங்களை அசால்ட்டாக ஏற்று ஹிட் கொடுத்தனர் நம் நட்சத்திரங்கள். அவ்வாறு மூன்று ரோல் பண்ணி சூப்பர் ஹிட் ஆன 7 படங்களை காணலாம்,

மூன்று முகம்: 1982 இல் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம். மொத்தமாக 250 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இதில் காவல் அதிகாரியாக நடித்த ரஜினியின் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் இன்றும் பிரபலம். மேலும் இதன் மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ரஜினி தட்டி சென்றார். 

ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்

தெய்வமகன்: ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்றால் அது சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த தெய்வமகன் திரைப்படம். சிவாஜி அகோரமான வேடத்தில் நடித்து பார்வையாளர்களின் நெஞ்சை உருக செய்திருந்தார்.

அபூர்வ சகோதரர்கள்: இன்று மாதிரி தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்தில், அப்பு கேரக்டரில் விளையாடியிருப்பார் கமல். எந்த ஒரு சலிப்பும் தட்டாது படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான காட்சிகளை நகர்த்திய கமல், ரசிகர்களை கொண்டாட வைத்தார். 

அது மட்டும் இன்றி இன்றுவரை பேசப்படும் கமலின் அபூர்வ சகோதரர்கள், படம் வெளிவந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் மேடை நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக ஒரு அப்பு பெர்பார்மன்ஸ் இருக்குமாம். அந்த அளவுக்கு மக்கள் மனதில் நிறைந்தது கமலின் அபூர்வ சகோதரர்கள்.

திரிசூலம்: சிவாஜி மூன்று வேடங்கள் ஏற்ற மற்றொரு திரைப்படம் திரிசூலம். 1979 ல் வெளிவந்த திரிசூலம் திரைப்படம் சிவாஜியின் 200 வது திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. சிவாஜி உடன் கே ஆர் விஜயா, ஸ்ரீப்ரியா, நம்பியார் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்

வரலாறு: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் ஏற்க தயங்கும் வித்தியாசமான கதை களத்தை தைரியமாக கையில் எடுத்தார் அஜித். படம் வருவதற்கு முன்பே பல கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான அஜித்திற்கு, இத்திரைப்படம் நல்ல பெயரை வாங்கித் தந்தது.

சத்யராஜ் கதை எழுதி இயக்கிய ஒரே திரைப்படம்

வில்லாதி வில்லன்: இன்று சினிமாவில் குணச்சித்திர நடிகராக கலக்கும் சத்யராஜ் 1995இல் கதை எழுதி இயக்கிய ஒரே திரைப்படம் என்றால் அது வில்லாதி வில்லன் தான். வக்கீல், குற்றவாளி, நிரபராதி என்ற மூன்று வேடங்களில் நடித்து தெறிக்க விட்டிருந்தார் சத்யராஜ்.  இது சத்யராஜின் 125 வது திரைப்படம் ஆகும்.

மெர்சல்: அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மெர்சல். இதில் தனது அரசியல் ஆர்வத்தையும், மக்களுக்கான சேவையையும் முழுக்க முழுக்க விளக்கியிருந்தார் விஜய். 

ஆளப்போறான் தமிழன் என்று அலறவிட்ட விஜய்க்கு இத்திரைப்படம் சிறந்த நடிகருக்கான சர்வதேச ஐரா விருதை பெற்று தந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்