Tamil Cinema News | சினிமா செய்திகள்
7 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட இளம்பெண்!
அரியானா மாநிலம் ரோக்தாக் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த 9-ம் வேலைக்கு சென்ற போது 7 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார் என பொலிஸ் தெரிவித்துள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்து, அவருடைய உடலை சிதைத்து காரை ஏற்றி மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்து உள்ளது. டெல்லியில் நிர்பயாவிற்கு நடந்ததை விட கொடூரமான செயல் மீண்டும் அரியானாவில் அரங்கேறி உள்ளது.
இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த தகவலின்படியே அவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.
நிர்பயா வழக்கில் 4 பேருக்கு சுப்ரீம் கோர்ட்டு மரண தண்டனையை உறுதிசெய்த நிலையில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நேரிட்டு உள்ளது மக்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
