அதிக சம்பளம் வாங்கும் 7 நடிகைகள்.. நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இவ்வளவு வித்தியாசமா

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இதுதான் சம்பளம் என்று தயாரிப்பாளர்கள் கொடுத்து விடுவார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு நடிகைகள் இத்தனை வருடம் வரை படம் நடித்து கொடுக்க வேண்டும் என்று அக்ரிமெண்ட் போட்டு நடிப்பார்கள்.

ஆனால் இப்போது அப்படி கிடையாது. நடிகைகள் தான் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகின்றனர். அதிலும் சம்பள விஷயத்தில் கறார் காட்டும் நடிகைகள் ஏராளம் உண்டு. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஐந்து நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது மற்ற நடிகைகளை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது பத்து கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் இவ்வளவு அதிக சம்பளம் கொடுத்தது கிடையாது.

சமந்தா நயன்தாராவிற்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் தங்கும் நடிகைகளின் பட்டியலில் சமந்தா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். தற்போது இவர் 5 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக பெறுகிறார். தற்போது இவருக்கு பாலிவுட் ஹாலிவுட் என்று பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் இது இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பூஜா ஹெக்டே தமிழில் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளமாக பெறுகிறார்.

ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நாயகியாக வலம் வரும் இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

தமன்னா தமிழில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் தெலுங்கு திரையுலகிலும் அதிக பிரபலமானவர். தற்போது இவர் திரைப்படங்களை விட வெப் தொடரில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது மூன்று கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த காஜல் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த காஜல் அகர்வால் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்தார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கும் இவர் சினிமாவை முற்றிலும் மறந்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் அந்த வகையில் இவர் சினிமாவில் ஒரு படத்துக்கு மூன்று கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா தற்போது முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வரும் இவருக்கு தமிழிலும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் இவருக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

Next Story

- Advertisement -