ஆக்ஷன் அவதாரம் எடுத்து காணாமல் போன 7 ஹீரோக்கள்.. உங்களுக்கெல்லாம் பிஞ்சி மூஞ்சி பாஸ்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! இந்தக் சிறப்புக் கட்டுரையில் தமிழ் சினிமாவில் நல்லதொரு நிலையில் இருந்த நடிகர்கள் ஆக்ஷன் அவதாரம் எடுக்கப் போய் மார்க்கெட் இழந்து சினிமாவை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட சில நடிகர்களை பற்றி காணலாம்.

ஸ்ரீகாந்த்: ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் போன்ற திரைப்படங்களின் மூலமாக நல்லதொரு காதல் நாயகன் பிம்பத்தை கட்டமைத்து வந்தார் நடிகர் ஸ்ரீகாந்த். ஆனால் பாவம் யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை அவருக்கும் ஆக்சன் நாயகன் ஆசை தொற்றிக்கொண்டது. ஜூட், போஸ் போன்ற ஆக்சன் திரைப்படங்களில் நடித்தார். இரண்டு திரைப்படங்களும் மாபெரும் தோல்வியை தழுவ சீக்கிரமே திரைத்துறையில் இருந்து காணாமல் போனார்

ஜீவா: ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்தார் ஜீவா. இவர் நடித்த கற்றது தமிழ் திரைப்படம் இவருக்கு நல்ல பெயர் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனாலும் ஆசை யாரை விட்டது. கோ நன்றாக போனாபோதும் யான் என்ற திரைப்படம் மூலமாக ஆப்ஷன் நடிகராக மாற நினைத்து சூடு போட்டுக் கொண்டார். அதன்பிறகு இவர் நடித்த எந்த திரைப்படமும் சரியாக போகாத காரணத்தால் தற்போது மார்க்கெட் குறைந்து சாதாரண ஒரு நடிகராக வலம் வருகிறார்.

பரத்: சங்கர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பரத் நன்றாக நடனம் ஆடும் திறமை கொண்டவர். காதல் கதைகளில் நடித்து வந்தவர் தப்பித்தவறி இயக்குனர் பேரரசின் கையில் அகப்பட்டார். பழனி, திருத்தணி என்று தொடர்ந்து ஆக்சன் மட்டும் பஞ்ச் டயலாக் கொண்ட இந்த கதையில் நடித்து மார்க்கெட்டை இழந்தார். தற்போது எந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாத வகையில் இவரது நிலைமை இருக்கிறது என்பதே உண்மை

பிரசாந்த்: காதல் இளவரசன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட நடிகர் பிரஷாந்த். பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் மேலும் ஷங்கரின் இயக்கத்தில் ஜீன்ஸ் திரைப்படத்தின் மூலம் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். ஆனால் இவரும் ஆக்சன் திரைப்படங்களின் மீது நாட்டம் கொண்டு நிறைய ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். மேலும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தின் காரணமாக பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்

ராகவா லாரன்ஸ்: ஒரே ஒரு பேய் கதையை வைத்துக்கொண்டு அதில் காமெடியை சேர்த்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார் ராகவா லாரன்ஸ். அவருக்கு மனதிற்குள் சின்ன ரஜினிகாந்த் என்ற நினைப்பு. மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் தனக்குத்தானே மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொண்டார். அந்த ஆக்சன் படம் படு குப்பையாக இருந்த காரணத்தால் சீக்கிரமே தியேட்டரைவிட்டு வெளியே சென்றது. மேலும் அவர் விருப்பப்பட்டு நடிக்கும் காஞ்சனா படங்களும் மக்களின் வரவேற்பை பெறாமல் குறைந்து கொண்டே வருகிறது.

ஜெயம் ரவி: ஜெயம் ரவி காதல் திரைப்படங்களின் மூலமாக பல வெற்றிகளை தமிழ் சினிமாவில் கண்டவர். அவ்வப்போது மாற்று சினிமாக்கள் பலவற்றிலும் நடிப்பார். ஆனாலும் அவரது அடையாளமாக இருப்பது ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் சம்திங் போன்ற காதல் திரைப்படங்களே. இவரும் பூலோகம், பூமி போன்ற ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை இழந்து கொண்டார்.

சந்தானம்: நகைச்சுவை நடிகராக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த சந்தானம் யாருடைய தூண்டுதலின் பெயரால் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து ஆரம்பித்தாரோ தெரியவில்லை. அப்போது இருந்து அவருக்கு பிடித்தது சனி. ஹீரோவாக இவரை பார்க்கவே மக்கள் தயங்கும் போது இவர் ஒரு சில படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் முயற்சி செய்தார். அந்தப் படங்கள் தோல்வியை சந்தித்தன. தற்போது நகைச்சுவை திரைப்படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம்.

Next Story

- Advertisement -