திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகேயுள்ள கண்ணபுரத்தில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பொங்கலை முன்னிட்டு நடக்கும் மாட்டுத்தாவணி மிகவும் புகழ் பெற்றது.

அதில் காங்கேயம் காளைகள், பசுக்கள், நாட்டு மாடுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவது இந்த சந்தையின் சிறப்பம்சம்.

மேலும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் குவிந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் உள்ளூர் வியாபாரிகள் கூட்டமும் களைகட்டியது.

இந்த மாட்டுத்தாவணியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.