வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இன்றுவரை அவிழ்க்க முடியாத 7 சினிமா மரணங்கள்.. கொலையா, தற்கொலையா என விளங்காத மர்மங்கள்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று சற்றே சோகமான ஒரு வரிசையை காணப்போகிறோம். தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்-நடிகைகள் துக்கம் தாளாமல் செய்துகொண்ட விபரீத தற்கொலைகளை பற்றி. வாருங்கள் அந்த வரிசையை பார்ப்போம்

மோனல்: பிரபல நடிகை சிம்ரனின் ஒன்றுவிட்ட தங்கையான மோனல் தமிழில் தளபதி அவர்களுடன் பத்ரி படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தவர் காதல் தோல்வியால் தற்கொலை என்னும் விபரீத முடிவை எடுத்தார். அவர் நடித்து வந்த திரைப்படங்களும் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பதிவு செய்யவும் வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குணால்: காதலர் தினம் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர் நடிகர் குணால். முதல்படமே சூப்பர் ஹிட்டாக அமைய தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். இவரும் மேலே சொல்லப்பட்ட மோணலும் இணைந்து ஒரு படத்தில் நடித்தனர். அதன்பிறகு இவர் நடித்த எந்த திரைப்படமும் கவனிக்கப்படாத காரணத்தால் சீக்கிரம் வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார். அதிகமான தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்தவர் தற்கொலை என்னும் தவறான முடிவை எடுத்தார்.

பிரத்யுஷா: சவுண்ட் பார்ட்டி, சூப்பர் குடும்பம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரதியூஷா. இவரும் இவருடைய காதலர் சித்தார்த் என்பவரும் ஒன்றாக தற்கொலை செய்திருந்தனர். இவர்கள் இருவரது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இந்த சோக முடிவை அவர்கள் எடுத்திருந்தனர்.

சில்க் ஸ்மிதா: தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியான சில்க் ஸ்மிதா பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவும் குணசித்திர நடிகையாகவும் நடித்தவர். பல திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் செய்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர். எண்பதுகளின் பிற்பாதியிலும் 90களின் ஆரம்பத்திலும் இவருக்கு இருந்த ரசிகர் கூட்டத்தை சொல்லி மாளாது. தனது சொந்த பிளாட்டில் தூக்கில் தொங்கிய படி தனது இறுதி நாளை முடித்துக் கொண்டார். அவரது இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னமும் அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது.

சாய் பிரசாந்த்: சின்னத்திரை நடிகர் சாய்பிரஷாந்த் வேகமாக வளர்ந்து வந்தவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தாமரை, இளவரசி என்று சீரியல்களில் பிஸியாக இருந்தபோதும் மனச்சோர்வால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இவர் எதற்காக தற்கொலை செய்து கொள்கிறோம் என்பதை தெளிவாக எழுதவில்லை. விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

சபர்ணா: இன்னொரு சின்னத்திரை பிரபலமான சபர்ணா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு சில படங்களில் நாயகியின் தோழியாக தலைகாட்ட ஆரம்பித்தார். சுந்தர் சி, அஞ்சலி இணைந்து நடித்த ஆயுதம் செய்வோம் படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் இவர். கை மணிக்கட்டு நரம்பை அறுத்து மரணித்தார் என்பது சோகமான செய்தி ஆகும்.

விஜே சித்ரா: சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு அப்போதுதான் வந்தார் விஜே சித்ரா. பல சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் மூலம் மிகவும் நீங்கா புகழ்பெற்ற விஜே சித்ரா தொடர்ந்து முன்னணி சீரியல் நடிகையாக இருந்து வந்தார். இவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக இப்போதும் பேசப்படுகிறது. இதில் முதல் குற்றவாளியாக இவரது காதலரை சந்தேகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News