fbpx
Connect with us

Cinemapettai

இந்திய சினிமாவின் 7 முக்கிய பிரம்மாண்ட படங்கள் OTTயில் ரிலீஸ்.. அப்போ இனி தியேட்டர்களுக்கு சங்கு தானா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்திய சினிமாவின் 7 முக்கிய பிரம்மாண்ட படங்கள் OTTயில் ரிலீஸ்.. அப்போ இனி தியேட்டர்களுக்கு சங்கு தானா?

கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து OTT தளங்களில் வெளியாகின்றன.

இந்த செய்தி கேட்டு பல திரையரங்க உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர். 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் திரைப்படங்கள் கூட நேரடியாக OTT தளங்களில் வெளியாக ரெடியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் இந்திய சினிமாவில் மிகப்பெரிய சினிமா வட்டாரம் ஆக இருப்பது பாலிவுட் சினிமா தான். மிகப்பெரிய வியாபாரமும் பாலிவுட் திரைப்படங்களுக்கு உள்ளது. பாலிவுட்டில் உருவாகி இருக்கும் ஏழு பிரம்மாண்ட படங்கள் OTT தளங்களில் வெளியாக உள்ளன.

அக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் லட்சுமி பார்ம். தமிழில் வெளிவந்த காஞ்சனா படத்தின் ரீமேக். இந்த படம் ஹாட்ஸ்டார் டிஸ்னி இல் வெளிவர உள்ளது.

இதனைத் தொடர்ந்து அஜய் தேவ்கன் நடித்த பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா படம், வித்யாபாலன் நடித்த சகுந்தலா தேவி(அமேசான்), சஞ்சய் தத் ஆலியா பட் நடித்த சடக் 2 (1991-ல் வந்த படத்தின் இரண்டாம் பாகம்), சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த தில் பெசாரா,அபிஷேக் பச்சன் நடித்த பிக் புல், புதுமுக நடிகர் நடித்த லூட்கேஸ் போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளன.

தமிழிலும் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சூர்யாவின் சூரரைப்போற்று ஆகிய படங்களுக்கு தொடர்ந்து OTT நிறுவனங்கள் டார்ச்சர் கொடுத்து வருகின்றன.

இதனால் தியேட்டர்காரர்கள் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதே போல் தமிழிலும் ஆரம்பித்துவிட்டால் மொத்த இந்தியாவும் திரையரங்குகளை இழுத்து மூடிவிட்டு போகவேண்டியது தான்.

Continue Reading
To Top