Entertainment | பொழுதுபோக்கு
நடித்து கொண்டு இருக்கும் போதே காணாமல் போன 7 நடிகைகள்.. வாரிசு நடிகைக்கும் இதே நிலைமைதான்

தமிழ் சினிமாவில் நடிப்பை துவங்கிய காலகட்டத்தில் டாப் ஹீரோயின்களுக்கு போட்டியாக நுழையும்போதே டஃப் கொடுத்த ஒரு சில நடிகைகள் நடித்துக் கொண்டிருக்கும் போதே காணாமல் போய் விடுகின்றனர். அந்த வரிசையில் இருக்கும் 7 நடிகைகள் ரசிகர்களிடையே இன்றும் பெரிதும் பேசப்படுகிறார்கள்.
லட்சுமி மேனன்: கேரளாவை சேர்ந்த இவர் மலையாளப் படத்தில் தன்னுடைய சினிமாவை துவங்கினாலும் தமிழில் வெளியான சுந்தரபாண்டியன், கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் வெகு சீக்கிரமாகவே இடம்பிடித்துவிட்டார். இந்தப் படங்களுக்குப் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த லட்சுமி மேனன் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தபின் மேல்படிப்பு படிக்க போவதாக சொல்லிவிட்டு நடிக்கும்போதே பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் காணாமல் போய்விட்டார்.
அமலா பால்: சிந்துசமவெளி என்ற சர்ச்சைக்குரிய தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், அதன் பிறகு மைனா படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்தப் படத்திற்கு பிறகு நட்சத்திர நடிகையாக விக்ரம், ஆர்யா, விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்த அமலாபால், அதன் பிறகு ஏஎல் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு, குறுகிய காலத்திலேயே விவாகரத்து ஆனதால் அதன் பிறகு சினிமாவில் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டார்.
தன்யா ரவிச்சந்திரன்: பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியாக தமிழ் சினிமாவில் நுழைந்த தன்யா பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் போன்ற படங்களில் துருதுருவென தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி வேகமாக வளர்ந்த நிலையில், அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டதால், தற்போது கிடைக்கக்கூடிய விளம்பரங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
சுருதி ஹாசன்: கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் பாடகியாகவும், நடிகையாகவும், இசையமைப்பாளராகவும் படங்களில் ரவுண்டு கட்டிய இவர், தற்போது சுத்தமாகவே படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
கேத்ரின் தெரசா: மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த கேத்ரின் தெரசா, அதைத்தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக இருந்த நிலையில், தற்போது ஓவராக வெயிட்யேறி குண்டு குண்டு என மாறி உள்ளதால் ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது’ என்பது போல சுத்தமாகவே பட வாய்ப்பு இல்லாததால் தற்போது ஒரு சில தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.
மெடோனா செபாஸ்டியன்: பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், நடித்த முதல் படத்திலேயே கிடைத்த ரசிகர்களின் ஆதரவால் அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’ என்ற தமிழ் படத்திலும், அதைத்தொடர்ந்து ஒரு பல படங்களிலும் நடித்து மிகக்குறுகிய காலத்திலேயே வேகமாக வளரும் நடிகையாக மாறினார். இவர் நடிப்பதற்கு முன்பே பாடகியாக இருந்தவர். தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலிருந்து மங்க தொடங்கி விட்டார்.
லேகா வாஷிங்டன்: தமிழில் ஜெயம்கொண்டான், உன்னாலே உன்னாலே, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவர், வந்த வேகத்திலேயே காணாமல் போன நடிகைகளின் லிஸ்டில் சேர்ந்து விட்டார். அத்துடன் இவர் சிம்புவின் கெட்டவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படம் ஒரு சில காரணத்தினால் கைவிடப்பட்டது. அந்த படத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்களே சினிமாவை விட்டு இவர் விலகியதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது திருமணம் செய்து கொண்டு மும்பையில் சிற்பக்கலை கலைஞராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இப்படி தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் கொடிகட்டிப் பறந்த சில நடிகைகள் வந்த வேகத்திலேயே காணாமல் போவது அவர்களுடைய ரசிகர்களை ஏங்க வைக்கிறது.
