Connect with us
Cinemapettai

Cinemapettai

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு.. ஆளுநரிடம் 5 அமைச்சர்கள் கோரிக்கை!

eps-ops-admk

Tamil Nadu | தமிழ் நாடு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு.. ஆளுநரிடம் 5 அமைச்சர்கள் கோரிக்கை!

இந்தியா முழுவதும் மருத்துவ  படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரியை தேர்வு செய்யும் முடியும்.

அதில்  அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியின்  நடவடிக்கையால் ஆளுநரிடம் பன்வாரிலால் புரோஹித்தை,

அமைச்சர்கள் கே.பி அன்பழகன், சி.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தி இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

ஏனெனில் இந்த இட ஒதுக்கீட்டினால், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் எளிதில் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்று நம்பப்படுகிறது.

மேலும்  மருத்துவ கனவுடன் இருக்கும் ஏழை மாணவர்களுக்கும் இது உதவும் என்று  பலர் தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிகிறது.

மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்காங்கே நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களையும் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது எடப்பாடியார் அரசு.

எனவே இந்த வருட நீட் தேர்வின் தேனியை சேர்ந்த அரசு பள்ளியில் படித்த மாணவர் ஜீவித் குமார், இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

இவர் அளித்த பேட்டியின்போது, ‘அரசுப் பள்ளி மாணவர்களால் முடியாதது எதுவும் இல்லை, நாங்கள் நினைத்தால் ஜாதி சாதிக்க முடியும்’ என்று கம்பீரமாக பேசி இருந்தது  ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை தூண்டிவிட்டது.

அதைப்போல் தற்போது எடப்பாடியார் அரசு,  அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பிப்பது மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top