தேசிய விருதை ராம்நாத் கோவிந்திடம் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்தை பலர் வெளியிட தொடங்கி இருக்கிறார்கள்.

வருடாவருடம் நடைபெறும் தேசிய விருது குடியரசுத் தலைவர் கையால் கொடுக்கப்படும். இந்த வருடமும் இது தான் நடக்கும் என வென்றவர்கள் டெல்லிக்கு புறப்பட்டனர். ஆனால், தேசிய விருது கமிட்டி சிறந்த நடிகர், நடிகை, இசை, தாதாசாகேப் பால்கே விருது உட்பட 11 விருதை மட்டுமே குடியரசு தலைவர் கொடுப்பார். மற்றவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கையால் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது அங்கிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழில் டுலெட் படத்தின் இயக்குனர் செழியன், யேசுதாஸ். நடிகை பார்வதி உட்பட 68க்கும் அதிகமானோர் விருது விழாவை புறக்கணித்தனர்.

அதிகம் படித்தவை:  துண்டிக்கப்படவுள்ள ஜியோ சேவைகள்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

தேசிய விருது மரபை குடியரசு தலைவர் மீறிவிட்டார் என குற்றம் சாட்டினர். அவர் தான் விருது தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு, மசியாமல் புறக்கணித்த பிரபலங்களின் இருக்கைகளை கமிட்டி உறுப்பினர்கள் நீக்கினர்.

இதை தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட 11 பேருக்கும் குடியரசு தலைவர் விருது வாங்கினார். அதில், ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிள்ளி போட்டது.

அதிகம் படித்தவை:  சித்தார்த்தையும் விட்டுவைக்காத அஜித் மோகம்!
rahman

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பிரச்சனை நடக்கும் போது ஒரு கருத்தை கூட தெரிவிக்கவில்லை. பலர் புறக்கணிக்கும் போது, ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும் வாங்கியது நியாயமாக இல்லை என கருத்துக்களை அள்ளி தெளித்தனர்.

அதே வேளையில், புறக்கணித்தவர்களின் கோரிக்கையே குடியரசு தலைவர் விருதை கொடுக்க வேண்டும் என்பது தான். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவர் தானே விருது கொடுத்தார் அதான் போய் வாங்கி இருக்கிறார் என அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். சர்ச்சைக்கு பஞ்சம் எங்கதான் இல்ல விடுங்கப்பா!