ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிளேபாய் ஆட்டம் போட்ட ஜெமினியின் 6 சூப்பர் ஹிட்ஸ்.. சகாக்களை வயிறெரிய செய்த சாக்லேட் பாய்

Gemini Ganesan  Super Hit Movies: பாட்டு பாடவா,  ஓஹோ எந்தன் பேபி என்று இன்றும் இளைஞர்கள் முனுமுனுக்கும் பாடலை கேட்கும் போது நம் நினைவில் வருபவர் ஜெமினி கணேசன் தான். நடிகராகவும் குணசித்திர நடிகர் ஆகவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோற்றினார்.

தமிழ் திரையுலகில் தோன்றிய முதல் பட்டதாரி நடிகர் என்ற பெருமையை உடையவர் ஜெமினி கணேசன். 70 களில் சாக்லேட் பாயாக கலக்கிக் கொண்டிருந்த காதல் மன்னன் ஜெமினி கணேசன்.

ஜெமினி ஸ்டுடியோவில் புது முகங்களை அறிமுகம் செய்யும் casting டைரக்டராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். ராமசாமி கணேசன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஜெமினி ஸ்டூடியோவில் ஒர்க் பண்ணியதன் மூலம் நன்றி மறவாது தனது முதல் படத்தில் ஜெமினி கணேசன் என்ற அறிமுகத்தோடு தோன்றினார்.

இயல்பான நடிப்பாலும் கண்ணியமான பண்பாலும் என்றும் இயக்குனர்களின் முதல் விருப்பத்தேர்வாக இருந்தார். வசீகரமான தோற்றத்தாலும் யதார்த்தமான நடிப்பாலும் பல தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்டிருந்தார். மிஸ்ஸியம்மா, வஞ்சிக்கோட்டை வாலிபன், பாசமலர், சுமைதாங்கி, பணமா பாசமா, பூவா தலையா, கற்பகம், சித்தி, இரு கோடுகள் என அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. 1953 ஆம் ஆண்டு வெளியான “மனம் போல் மாங்கல்யம்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஜெமினி மற்றும் சாவித்திரி  இருவரும்  சிறந்த தம்பதி நடிகர்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர்.

Also Read:சாம்பார் என்ற பட்டத்தை வாங்கிய ஜெமினி கணேசன்.. பலரும் அறியாத காதல் மன்னனின் லீலைகள்

லவகுசா, கந்தன் கருணை போன்ற பக்தி படங்களிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஊமைத்துரையாகவும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கமலுடன் களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி உன்னால் முடியும் தம்பி, அவ்வை சண்முகி என்ற மூன்று படங்கள் நடித்தார். கமல் மற்றும் கே எஸ் ரவிக்குமார், அவ்வை சண்முகிக்காக சிவாஜி கணேசனை அணுகிய போது இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் ஜெமினி கணேசன் மட்டுமே என்று சிவாஜி கணேசன் கூறியதன் மூலம் கமலுடன் அவ்வை சண்முகியில் நடித்து, தான் என்றும் காதல் மன்னன் என்பதை நிரூபித்தார்.

சினிமா, நாடகங்கள் என நடித்துக் கொண்டிருந்த அவர் தனது இறுதி காலத்தில் சின்னத்திரையில் குட்டி பத்மினியின் கிருஷ்ணதாசி என்ற சீரியலில் ஜெமினி கணேசன் மற்றும் நளினி போட்டி போட்டு நடித்து இருந்தனர். இவரின் மகள் கமலா செல்வராஜ் தற்போது சென்னையில் மருத்துவராக உள்ளார்.  திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஜெமினி கணேசன் என்றும் காதல் மன்னனே!

Also Read:காதல் மன்னனின் நிறைவேறாத ஆசை.. கனவுக்கு உயிர் கொடுத்த ஜெமினியின் குடும்பம்

- Advertisement -

Trending News