இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த 6 சீரியல்கள்.. தாத்தா சென்டிமென்ட் வைத்து, முன்னுக்கு வந்த பாக்கியா

Serial TRP rating: சின்னத்திரை பொருத்தவரை பல சேனல்கள் போட்டி போட்டு குடும்பங்களை கவரும் விதமாக எக்கச்சக்கமான சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதில் எந்த சீரியல் மக்களின் ஃபேவரிட் சீரியலாக இருக்கிறதோ, அதுவே டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து வருகிறது. அப்படி ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல் முதல் ஆறு இடத்தை தக்க வைத்திருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய சீரியல்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

கயல்: அட போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் என்று விரக்தியில் சொல்வது போல் கயல் மற்றும் எழிலின் திருமணம் பார்ப்பவர்களை சலிப்படைய வைத்துவிட்டது. ஏனென்றால் அந்த அளவிற்கு இழுவையாக இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி கயல் மற்றும் எழிலின் திருமணம் கை கூடி விட்டது. இதையும் கெடுக்கும் விதமாக சிவசங்கரி, தீபிகா மற்றும் பெரியப்பா செய்யும் சூழ்ச்சிகளை முறியடித்து கயலை எழில் எப்படி கரம் பிடிக்கிறார் என்பது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.98 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது.

உருண்டு பிரண்டு விட்ட இடத்தை பிடித்த பாக்கியா

சிங்க பெண்ணே: ஆனந்திக்கு ஜோடி யார் தான் என்று ஒவ்வொரு நாளும் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் விதமாக அன்பு மற்றும் மகேஷின் காதல் தற்போது வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதுல வேற அழகன் யார் என்ற உண்மையை கண்டுபிடிக்கும் விதமாக ஆனந்தி ரொம்பவே மெனக்கெடு செய்து வருகிறார். இதற்கிடையில் குடும்ப பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஆனந்திக்கு சப்போர்ட்டாக அன்பு களத்தில் இறங்கி இருக்கிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.64 புள்ளிகளைப் பற்றி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை: ரோகினி மாட்டுவதை தவிர மற்ற எல்லா கதையும் கொண்டுவந்து டிஆர்பி ரேட்டிங்கில் 8.61 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் ரோகிணிக்கு தேவைப்படும் ஒரு லட்ச ரூபா பணத்துக்காக ஏற்பாடு பண்ணும் பொழுது முத்துவிடம் மாட்டுவதற்கான காட்சிகள் கூடிய விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கு தான் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஏற்ப முத்துவிடம் ரோகிணி வசமாக சிக்க போகிறார்.

மூன்று முடிச்சு: எதார்த்தமான கதையும், நந்தினி மற்றும் சூர்யாவின் நடிப்பும் பிரமாதம் என்று சொல்லும் அளவிற்கு மக்களை கவர்ந்து விட்டது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்ற சீரியல்களை விட இந்த ஒரு சீரியல் நன்றாக இருக்கிறது என்று மக்கள் கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் இன்னும் ஒரு சில வாரங்களில் முதல் இடத்தை பிடித்து விடும். இப்பொழுது 8.27 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: ஆதிரை மற்றும் பிரபுவின் கல்யாணத்துக்காக ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல் இதை கெடுத்து விடுவதற்காக ஆதிரையின் சித்தியும், பிரபுவின் சித்தப்பா குடும்பமும் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். இதையெல்லாம் முறியடிக்கும் விதமாக ஆதிரை கொடுக்கும் ஒவ்வொரு பதிலடியும் பிரமிக்க வைக்கிறது. இந்த வாரம் 8.20 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

பாக்கியலட்சுமி: டிஆர்பி ரேட்டிங்கில் சமீப காலமாக பின்தங்கி இருந்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது தாத்தா இறப்பின் சென்டிமென்ட் காட்சியை வைத்து, விட்ட இடத்தை பிடிக்கும் விதமாக முன்னுக்கு வந்து விட்டது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக தாத்தாவின் இறப்பை ஒன்னுவிடாமல் காட்டி பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்துவிட்டது. அதனாலே என்னமோ பிளான் போட்டபடி டிஆர்பி ரேட்டிங்கில் 7.70 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தை தக்க வைத்து விட்டது.

- Advertisement -spot_img

Trending News