இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜீத், விஜய் என டாப் ஹீரோக்கள் படங்கள் எதுவுமே இல்லை. அடுத்த நிலையில் உள்ள நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன.

தனுஷ் நடித்த கொடி, கார்த்தி நடித்த காஷ்மோரா, விஷால் நடித்த கத்தி சண்டை, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு, விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் போன்ற படங்கள் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சில படங்கள் கடைசி நேரத்தில் வராமலும் போகலாம். காரணம், தியேட்டர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்.

இப்போதைய நிலவரப்படி 6 படங்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது, ஆனால் அக்டோபர் மாதம்தான் எத்தனைப் படங்கள் என்பது உறுதியாகத் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here