fbpx
Connect with us

உசிலம்பட்டி அருகே லாரியும் ஷேர் ஆட்டோவும் பயங்கரமாக மோதி 6 பேர் பலி

Tamil Nadu | தமிழ் நாடு

உசிலம்பட்டி அருகே லாரியும் ஷேர் ஆட்டோவும் பயங்கரமாக மோதி 6 பேர் பலி

உசிலம்பட்டி அருகே லாரியும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் பலி, பள்ளி மாணவிகள் உள்பட 3 காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் உசிலம்பட்டியிலிருந்து பாறைப்பட்டி நோக்கி சென்ற லாரியும், ஜோதில்நாயக்கணூரிலிருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற ஷேர் ஆட்டோவும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரு பள்ளி மாணவிகள் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்த சூழலில் விரைந்து வந்த காவல்த்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் உயிரிந்த ஆறு பேரில் கோடாங்கி நாயக்கன்பட்டி அசோக், ஜோதிநாயக்கணூர் முத்துலெட்சுமி, வாசியம்மாள், தாடையம்பட்டி சத்யா மற்றும் கீழப்புதூரைச் சேர்ந்த குருவம்மாள், தும்மக்குண்டு முருகன் என ஆறு பேரின் அடையாளங்களை கண்டறிந்தனர்.

மேலும் காயமடைந்த ஜோதில்நாயக்கணூரைச் சேர்ந்த நாகஜோதி மற்றும் பள்ளி குழந்தைகள் சர்மிளா, தனுஷா என்ற மூவருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் உடல்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்த போலிசார் மற்றும் உசிலம்பட்டி கோட்டாச்சியர் சௌந்தர்யா இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி பகுதியில் ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது உசிலம்பட்டி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top