India | இந்தியா
மனைவியுடன் 6 மணி நேரம்.. ஜெயிலுக்குள் துருவ் சந்தோஷம்.. மனம் நெகிழ்ந்த அம்மா
சண்டிகர்: ஜெயிலில் உள்ள கொலை குற்றவாளி துருவ்க்கு சிறையிலேயே திருமணம் நடந்தது. புது தாலியின் ஈரம் காய்வதற்குள், வெறும் 6 மணி நேரம் மட்டுமே மனைவியுடன் அவர் இருந்தார்.பின்னர் இருவரும் பிரிந்து சென்றனர்.
பஞ்சாப் மாநிலம் நபா பகுதியை சேர்ந்தவர் மன்திப் சிங் என்ற துருவ், இவர் தன்னுடைய பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்துவிட்டார். இதற்காக துருவ்-க்கு ஆயுள் தண்டனை கிடைத்தள்ளது. பஞ்சாப்பில் உள்ள நபா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறைக்கு சென்று 10 வருஷங்கள் ஆகின்றன.. இப்போது துருவ்-க்கு 35 வயதாகிறது இதனால் எப்படியாவது மகனுக்கு கல்யாணத்தை பண்ணிவைக்க முடிவு செய்தார் அவரது தாய்.
ஆயுள் தண்டனை என்று தெரிந்தும் அவர் மனசு கேட்கவில்லை. மகனுக்காக பெண்ணையும் தேடினர்.. கடைசியில் கன்னா என்ற பகுதியை சேர்ந்த பவன் தீப் கவுர் என்ற பெண்ணை பேசி முடித்தார். . இந்தவிஷயத்தை துருவ்-க்கும் தெரிவித்தார். இதையடுத்து தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருப்பதால், பரோல் வழங்க வேண்டும் என்று நீதிமன்றதல் துருவ் முறையிட்டார்.
ஆனால் போலீசார் இதற்கு விடவே இல்லை. பரோல் சாக்கை வைத்து தப்பித்துவிடக்கூடும் என்றும் பரோல் தரக்கூடாது என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள் இதனை ஏற்ற நீதிமன்றம் துருவ்-க்கு பரோல் வழங்க மறுத்துவிட்டது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு, திரும்பவும் பரோல் கேட்டு கோர்ட்டுக்கு போனார் துருவ்.
இதை பரிசீலரித்த நீதிமன்றம், வேண்டுமானால் சிறை வளாகத்திலேயே கல்யாணத்தை வைத்து கொள்ளுங்கள், 6 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது, அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைத்துறைக்கு ஆணையிட்டது.
இதையடுத்து நேற்று ஜெயிலுக்குள் துருவ்-பவன் தீப் கவுருக்கு கல்யாணம் நடந்தது.. கல்யாண பெண் ரோஸ் கலரில் ஆடை உடுத்தியிருந்தார்.. ஜெயிலுக்குள் கல்யாணம் என்பதால் முக்கியமான சொந்தக்காரர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுடன் சேர்ந்து இந்த மணமக்களை அங்கிருந்த போலீசாரும் வாழ்த்தினர். வெறும் 6 மணி நேரம்தான் துருவ் கட்டின மனைவியுடன் கூட இருந்தார். அதற்கு பிறகு, சிறைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள்.
