சாந்தனு தவறவிட்ட 6 ஹிட் படங்கள்.. மகாராஜாவை மிஸ் பண்ணி விஜய் சேதுபதியை தூக்கிவிட இதுதான் காரணம்

Shanthanu and Maharaja Movie: நடிகர் சாந்தனு, பாக்யராஜின் வாரிசாக சினிமாவிற்குள் நுழைந்தாலும் திறமை இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு படங்களிலும் வெற்றியை பார்ப்பதற்கு போராடி வருகிறார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகியும் சினிமாவில் இவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள இன்னும் அல்லல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்த படங்களிலேயே இவருக்கு பெயர் கிடைத்தது என்றால் சமீபத்தில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் படத்தை சொல்லலாம். இந்த சூழ்நிலையில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தை பற்றிய சில விமர்சனங்கள் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக வருகிறது.

சாந்தனு மிஸ் பண்ணிய சூப்பர் ஹிட் மூவி

அதாவது நித்திலன் சுவாமிநாதன், மகாராஜா படத்தின் கதையை முதன் முதலில் சாந்தனு மற்றும் பாக்யராஜிடம் தான் சொல்லி இருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு காரணங்களால் சாந்தனு இதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பின் பல வருடங்கள் கழித்து மறுபடியும் மகாராஜா படத்தின் கதையை கொண்டு வந்திருக்கிறார்.

அதே நேரத்தில் விஜய் சேதுபதியும் ஹீரோ இமேஜை தக்க வைப்பதற்கு தவித்து வந்த நிலையில் இருவருடைய கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துவிட்டது. நித்திலன், மகாராஜா படத்தின் கதையை வைத்திருந்ததை விஜய் சேதுபதிக்கு ஏற்ற மாதிரி சில காட்சிகளையும் இப்ப இருக்கிற நிலைமைக்கு தகுந்தார் போல் முக்கியமான திருத்தங்களை கொண்டு வந்து மாபெரும் வெற்றியை கொடுத்து விட்டார்.

இந்த படம் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றதனால் 100 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெட்ப்ளிக்சிலும் வெளியிட்டு இந்தியா மட்டும் இல்லாமல் உலக அளவில் மகாராஜா படம் கவனத்தை பெற்று விட்டது. இந்த ஆண்டு நெட்ஃப்லிக்ஸ்-ல் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் மகாராஜா தான் என்ற பெருமையும் வாங்கி விட்டது.

உலகம் முழுவதிலும் நெட்ஃப்லிக்ஸ்ல் சுமார் 18.6 மில்லியன் பேர் திரைப்படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். மேலும் ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்நிலையில், மகாராஜா படத்தில் முதலில் சாந்தனுவை அணுகியதாகவும், அவர் இந்த படத்தை தவற விடுவதற்கு பாக்கியராஜ் தான் காரணம் என்றும் இயக்குனர் நித்திலன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக சாந்தனு, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதாவது மகாராஜா போல் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததற்கு இயக்குனர் நித்திலனுக்கு நன்றி. என்னை இந்த கதைக்கு முதலில் தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஆனால் இந்த படத்தை தவற விடுவதற்கு என் அப்பாவோ அல்லது நானோ காரணம் இல்லை.

அந்த சமயத்தில் தயாரிப்பாளர்கள் இந்த கதையை நம்பி ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லாமல் போனதால் இந்த படம் கைநழுவி போனதாக கூறியிருக்கிறார். ஆனால் எது எப்படியோ விஜய் சேதுபதி நடித்ததால் மாபெரும் வெற்றி படமாகவும் அனைவரும் தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு பேசும்படியாக அமைந்து விட்டது.

சாந்தனு இதற்கு முன்னதாகவும் சில ஹிட் படங்களையும் தவறவிட்டிருக்கிறார் என்பது வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் பாய்ஸ், காதல், சுப்ரமணியபுரம் படத்தின் ஜெய் கேரக்டர், களவாணி, டானாக்காரன் போன்ற பல ஹிட் படங்களையும் மிஸ் பண்ணி இருக்கிறார். இதெல்லாம் சினிமாவில் சாதாரணம் என்று சொல்வதற்கு ஏற்ப இருந்தாலும் வெற்றியை பார்க்க வேண்டும் என்று போராடத் துடிக்கும் சாந்தனுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக போய்விட்டது.

Next Story

- Advertisement -