கௌரவ கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் பின்னிய 6 படங்கள்.. மறக்கவே முடியாத துரை ஐயா 

சினிமாவில் ஆரம்ப கால கட்டங்களில் ஹீரோவாக அறிமுகமான ராஜ்கிரண் தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களில் மாஸ்காட்டி வருகிறார். அதிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் கௌரவமான கேரக்டரில் கெத்தாக, தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அப்படியாக கௌரவ கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் பின்னி படலெடுத்த 6 படங்களை பற்றி பார்க்கலாம்.

கொம்பன்: எம்.முத்தையா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் கொம்பன். இப்படத்தில் கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் ராஜ்கிரண் முத்தையா என்னும் கதாபாத்திரத்தில் லட்சுமிமேனனின் தந்தையாக நடித்திருப்பார். அதிலும் கார்த்திக்கு உறுதுணையாக இருக்கும் கெத்தான கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருப்பார்.

Also Read: ராஜ்கிரண் கல்லாகட்டிய 5 திரைப்படங்கள்.. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அசத்திய 2 படங்கள்

பவர் பாண்டி: நடிகர் தனுஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பவர் பாண்டி. இதில் பிரசன்னா, சாயா சிங், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ராஜ்கிரண் அனைவரும் மதிக்க கூடிய வகையில் சினிமா துறையுலகில் பிரபல நட்சத்திரங்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரியும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

காவலன்: சித்திக் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ஆகும். இதில் விஜய் உடன் அசின், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் அசினின் தந்தை கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் முத்துராமலிங்கமாக நடித்திருப்பார். அதிலும் விஜய்க்கு எதிராக இருந்து பின்னர் மகளின் வாழ்க்கைக்காக நல்ல முடிவை எடுக்கும் அப்பாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: வனிதாவால் நடுத்தெருவுக்கு வந்த ராஜ்கிரண்.. மாணிக்கம் படத்தின் போது ஏற்பட்ட நெருக்கம்

நந்தா: பாலா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நந்தா. இதில் சூர்யா, லைலா, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சிறைச்சாலையில் இருந்து வெளிவரும் நந்தாவின் படிப்பு செலவிற்கு உதவி செய்பவர் ஆகவும், அந்த ஊரின் நன்மதிப்பைப் பெற்ற பெரியவர் என்னும் கதாபாத்திரத்தில் தனது கெத்தான நடிப்பில் மாஸ் காட்டி இருப்பார்.

வேங்கை: ஹரி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் வேங்கை. இதில் தனுஷ் உடன் தமன்னா, ராஜ்கிரண், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், தனுஷின் தந்தையாக வீரபாண்டி என்னும் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் தனது நடிப்பின் மூலம் தனுஷிற்கே டஃப் கொடுக்கும் விதத்தில் நடித்து அசத்தி இருப்பார். 

சண்டக்கோழி: லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் சண்டக்கோழி. இப்படத்தில் விஷால் உடன் மீரா ஜாஸ்மின் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். இதில் ராஜ்கிரண், விஷாலின் தந்தையாக ஊரே வணங்கும் துரை ஐயா என்னும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் மிரட்டி இருப்பார்.

Also Read: என் ராசாவின் மனசிலே படத்தில் முதலில் நடிக்கவிருந்த 2 பிரபலங்கள்.. முன்னணி ஹீரோக்களை மிரள விட்ட கஸ்தூரி ராஜா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்