இந்த வாரம் OTT -ல் வெளியாகும் 6 தரமான படங்கள்.. ஆஸ்கருக்கு செல்லும் வாழ, கொட்டுக்காளியை மிஸ் பண்ணிட்டீங்களா?

பொதுவாகவே ரசிகர்களுக்குத் தியேட்டருக்குச் சென்று படம் வெளியான அன்றே FDFS பார்க்கறதே தனி சந்தோசம் தான். ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இருக்கும் தியேட்டர் சென்று படம் பார்க்கும் ஆர்வம் மற்ற நடிகர்களின் படங்களுக்கும், சின்ன பட்ஜெட் படங்களுக்கும் அதிகளவில் இல்லையென்றாலும், நல்ல தரமான கதையம்சமுள்ள படங்களை ரசிகர்கள் கைவிட்டதில்லை.

ரசிகர்களுக்கு ஒரு படம் பிடித்துவிட்டால் அதைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிவிடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் வாரம் தோறும் படங்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு OTTயில் ரிலீஸாகி வருகின்றன. அந்த வகையில், தியேட்டரில் ரிலீசான தமிழ் படங்கள் இந்த வாரம் என்னென்ன OTT யில ரிலீசாகப் போகுதுன்னு தெரிஞ்சிக்கலாம்.

மலையாளத்தில், ஆனந்த் மேனன் இயக்கத்தீல், சிஜு சன்னி, சாப் புரோஸ், ஜெமதீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘வாழ’ – பயோபிக் ஆப் ஏ பில்லியன் பாய்ஸ் என்ற திரைப்படம் கடந்த ஆகஸ்க்ட் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ. 4 கோடியில் எடுக்கப்பட்டும் ரூ.40 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் செப்டம்பர் 23 ஆம் தேதி ரிலீசாகி ஓடிடி தளத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்து பிளிங்க் என்ற பட த்தை பெங்களூரு ஸ்ரீநிதி எழுதி இயக்கியுள்ளார். இதில், சைத்ரா, சுரேஷ் அங்காலி, ரவி அனேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த மார்ச் 8 ஆம் தேதி தியேட்டரில் ரிலீசான இப்டம் இன்று செப்டம்பர் 25 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

விவேக் அத்ரேயா இயக்கத்தில், நானி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியான தெலுங்குப் படம் சரிபோதா சனிவாரம். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் 26 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை தியேட்டரில் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆர்வமுடன் உள்ளனர்.

அதேபோல், அருள் நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான படம் டிமாண்டி காலனி 2. இப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி இப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.

சூரி மற்றும் அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில், பிஎச். வினோத் ராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான படம் கொட்டுக்காளி. இப்படம் சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் சிம்பிலி சவுத் என்ற ஓடிடி தளங்களில் ரிலீசாகவுள்ளது.

ஹிமாங்க கவுர் இயக்கத்தில், பவன் பம், ஸ்ரேயா பிலங்கர் நடிப்பில் உருவாகியுள்ள TaazaKhabar Season-2 வரும் செம்படம்பர் 27 ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இவ்வாரம் 6 படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீசாகவுள்ளதால் தியேட்டரில் இப்படங்களைப் பார்க்க முடியாதவர்கள் ஓடிடி தளங்களில் தங்களின் பேவரெட் படங்களைப் பார்க்க ஆர்வமுடன் உள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News