Tamil Cinema News | சினிமா செய்திகள்
6 நாட்களில் பாக்ஸ் ஆபிசை அதிரவைத்த செக்க சிவந்த வானம்.! இது வசூல் விவரம்
கடந்த வாரம் வெளியான செக்கச் சிவந்த வானம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி உள்ளார், சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், என பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளார்கள்.

ccv – Chekka Chivantha Vaanam6
இவர்களை அனைவரையும் வைத்து பக்காவாக இயக்கிய திரைப்படம் செக்கச் சிவந்த வானம் இது உண்மையிலேயே மணிரத்னம் படம் தானா என அனைவரையும் கேட்க வைத்து விடும் ஏனெனில் படமும் சரி படத்தின் வசூலும் சரி வேற லெவலில் இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 6 நாட்கள் முடிந்த நிலையில் படத்தின் வசூல் விவரம் தற்போது தெரியவந்துள்ளது, நாடு முழுவதும் செக்கச் சிவந்த வானம் சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது, இதில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 35 கோடி வரை இருக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் படத்தின் ஓவர்சிஸில் 25 கோடி வரை வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
