சத்தமே இல்லாமல் தொடர்ந்து 6 ஹிட் கொடுத்த அருள்நிதி.. சம்பளமே ஏற்றாமல் ஹாரர் வாழ்க்கையில் மூழ்கிய மூர்க்கன்

அருள்நிதி டிமாண்டி காலனி 2 படத்தால் செம ஹேப்பி மூடில் இருக்கிறார். 2015ஆம் ஆண்டு, எப்பொழுது டிமான்டி காலனி படத்தை கையில் எடுத்தாரோ அதிலிருந்து ஆரம்பித்தது இவருக்கு ஹாரர் சினிமா கேரியர். அடுத்தடுத்து தொடர்ந்து எட்டு ஹாரர் படங்கள்.

அருள்நிதி நடித்த 23 படங்களில் 15 படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று, ஹிட் வரிசையில் இடம் பெற்றது. இப்பொழுது ஒன்பது ஆண்டுகள் கழித்து எடுத்த டிமான்டி காலனி 2 படம் இவருக்கு அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதனால் அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

ஏற்கனவே இவர் கேரியரில் ஏழு ஆண்டுகளில் 8 ஹாரர் படங்கள் நடித்துள்ளார். டிமான்டி காலனியில் ஆரம்பித்து ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள்,k 13,டைரி, தேஜாவு, டி ப்ளாக், டிமான்டி காலனி 2 என அடுத்தடுத்து ஹாரர் படங்களை தேர்வு செய்து வருகிறார். இதுவரை அருள்நிதி 75 லட்ச ரூபாய் தான் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

சம்பளமே ஏற்றாமல் ஹாரர் வாழ்க்கையில் மூழ்கிய மூர்க்கன்

இப்பொழுது ஹாரர் ஹீரோ என பெயர் எடுத்துள்ளார். தொடர்ந்து இவருக்கு இந்த மாதிரி படங்கள் தான் கை கொடுக்கிறது. ஆனால் இவர் தேர்ந்தெடுக்கும் கதை ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது. இடையில் கழுவேத்தி மூர்க்கன், திருவின் குரல் இரண்டு படங்களும் இவருக்கு கமர்சியல் ஹிட் ஆனது. இதுவும் சஸ்பென்ஸ் திரில்லராகவே அமைந்தது.

இப்பொழுது அருள்நிதி டிமான்டி காலனி 2 து கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து வருகிறார். ”பம்பர்” பட இயக்குனர் செல்வகுமார் உடன் அடுத்த படத்தில் இணைகிறார் அருள்நிதி. அவர் சொன்ன கதை இவருக்கு மிகவும் பிடித்துள்ளதாம். தயாரிப்பாளரையும் இவரே தேர்வு செய்துள்ளார்.

Next Story

- Advertisement -