fbpx
Connect with us

ஐபில் 2018 துவக்க விழாவில் அணியின் கேப்டன்கள் பங்கேற்க தேவையில்லை. காரணம் என்ன தெரியுமா ?

News / செய்திகள்

ஐபில் 2018 துவக்க விழாவில் அணியின் கேப்டன்கள் பங்கேற்க தேவையில்லை. காரணம் என்ன தெரியுமா ?

சென்னை மற்றும் மும்பை அணிகளை தவிர்த்து மற்ற கேப்டன்கள் ஏப்ரல் 7 ஆரம்பிக்கும் துவக்க விழாவில் பங்கேற்க்கத்தேவையில்லை என்ற முடிவை கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.

ஐபில்

இந்தியாவை பொறுத்தவரை சம்மர் வந்துவிட்டால், ஐபில் கோலாகலமும் வந்துவிட்டது என்று தான் அர்த்தம். இரண்டு மாத கோடை கொண்டாட்டமே இந்த ஐபில். இந்த வருடமும் வழக்கம் போல 8 அணிகள் மோதுகின்றன. இரண்டு ஆண்டு தடை முடிந்த பின் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளன. இவை தவிர்த்து வழக்கம் போல பஞ்சாப், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதெராபாத் அணிகளும் விளையாடவுள்ளனர்.( புனே மற்றும் குஜராத் அணிகள் கிடையாது)

துவக்க விழா

ஆண்டு தோறும் துவக்கவிழா மிகவிமர்சையாக நடை பெரும். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கலை காட்டும் இந்த விழா. பின்பு அணிகளின் கேப்டன்கள் “ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்” என்ற உறுதிமொழியில் கையெழுத்து இடுவர்.

IPL-Trophy

எனினும் இந்த ஆண்டு அது சாத்தியமில்லை. ஏனென்றால் எப்பொழுதும் மேட்ச் தொடங்குவதும் ஒரு நாள் முன்பு துவக்க விழா நடக்கும். இம்முறை முதல் மேட்ச் (மும்பை vs சென்னை ) ஆடும் ஏப்ரல் 7 அன்று தான் துவக்கவிழா. மேலும் அடுத்த நாள் ஏப்ரல் 8 அன்று இரண்டு போட்டிகள் நடை பெறவுள்ளது. 4 மணிக்கு பஞ்சாப் – டெல்லி, 8 மணிக்கு பெங்களூரு – கொல்கத்தா. எனவே துவக்க விழாவில் பங்கேற்று விட்டு கேப்டன்கள் தங்கள் அணியுடன் சென்று இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஐ

வீர்களின் அலைச்சலை குறைக்க முடிவு செய்த ஐபில் நிர்வாகம் 8 கேப்டன்களையும் வைத்து ஏப்ரல் 6 ஆம் தேதி வீடியோ ஷூட் செய்ய முடிவு செய்துள்ளது. துவக்க விழாவின் பொழுது இதனை திரை இடுவார்களாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top