திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

நயன்தாராவின் கேரியரை தூக்கிவிட்ட 6 சிறந்த படங்கள்.. ரவுடியாக ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த காதம்பரி

Nayanthara Best Movies: போட்டி நிறைந்த திரை உலகில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து ஹீரோக்கு இணையாக பல படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நயன்தாரா கெத்தாக பிடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரண ஒரு நடிகையாக நடித்து வந்த நயன்தாராவிற்கு கேரியரே மாற்றி அமைக்கப்பட்ட சில படங்கள் மாபெரும் வெற்றியை கொடுத்து கேரியரை தூக்கி விட்டிருக்கிறது. அப்படிப்பட்ட படங்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம்.

கோலமாவு கோகிலா: நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கோலமாவு கோகிலா. இதில் ஹீரோ என்று யாரையும் கமிட் பண்ணாமல் முழுக்க முழுக்க நயன்தாராவின் நடிப்பை மட்டும் நம்பி அவருக்காக எடுக்கப்பட்ட ஒரு கதையாக வெற்றி பெற்று இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நெல்சனுக்கு இயக்குனர் என்னும் முத்திரையை வாங்கி கொடுத்ததே இப்படம் தான்.

நானும் ரவுடிதான்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் நயன்தாரா காது கேட்காத கேரக்டரில் காதம்பரி கதாபாத்திரத்தை எடுத்து நடித்திருக்கிறார். ஆனால் காது கேட்கவில்லை என்றாலும் பேச்சாளையும் நடிப்பாளையும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொள்ளையடித்திருக்கிறார். இவருக்காக தான் இப்படம் வெற்றி பெற்றது என்று சொல்லும் அளவிற்கு நயன்தாராவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து விட்டது.

மூக்குத்தி அம்மன்: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு அம்மன் கேரக்டரில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தெய்வீக மனிதனை நம்பி ஏமாற வேண்டாம் என்ற கான்செப்டில் எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் நயன்தாராவுக்கும் ஆர்ஜே பாலாஜிக்கு ஒரு திருப்புமுனையாக வெற்றி பெற்றது.

ராஜா ராணி: இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படம் வெளிவந்தது. இதில் நயன்தாரா, ரெஜினா கேரக்டரில் தைரியமாகவும் எதையும் தாங்கும் இதயம் போல் என்பதற்கு ஏற்ற மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் நயன்தாராவின் நடிப்பை வியந்து பார்க்கும் அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மாதமாக நடித்துக் காட்டி இருப்பார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்கள் நயன்தாராவை தேடி வர ஆரம்பித்தது.

இமைக்கா நொடிகள்: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள் க்ரைம் திரில்லர் படமாக வெளிவந்தது. இதில் நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அத்துடன் விஜய் சேதுபதி மரணத்திற்கு பிறகு அதற்கு தண்டனை கொடுக்கும் விதமாக நயன்தாராவின் நடிப்பு பிரமிக்க வைக்கும் அளவிற்கு மிரட்டலாக இருந்தது. அத்துடன் இதில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் யூகிக்க முடியாத அளவிற்கு நயன்தாராவின் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

ஜவான்: இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் ஜவான் படம் வெளிவந்தது. இதுதான் நயன்தாராவுக்கு பாலிவுட்டின் முதல் படம். ஆனால் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நடிப்பை வெளுத்து வாங்கி விட்டார். அதனாலேயே பாலிவுட்டில் இவருக்கு என்று ஒரு முத்திரை கிடைத்துவிட்டது.

அந்த வகையில் நயன்தாரா கிட்டத்தட்ட 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தொடர் வெற்றியை பெற்ற நயன்தாரா எப்பொழுது விக்னேஷ் சிவன் கையை பிடித்தாரோ, அப்பொழுது இருந்து எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்பதற்கு ஏற்ப தமிழில் நடித்த படங்கள் பெருசாக சொல்லும்படி எடுபடவில்லை. அத்துடன் தனிப்பட்ட முறையிலையும் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

Trending News