தரமான படங்களால் ரீ-என்ட்ரியில் ஜெயித்துக் காட்டிய 6 நடிகர்கள்.. அதிலும் மாஸான கம்பேக் கொடுத்த சிம்பு, கமல்

மாஸ் ஹீரோவாக இருந்த சில நடிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வெற்றி படம் கொடுக்க முடியாமல் திணறுகின்றனர். மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபிக்க விதமாக ஒரு படத்திற்காக காத்திருக்கின்றனர். அவ்வாறு ஒரு தரமான படத்தால் ரீ-என்ட்ரியில் ஜெயித்து காட்டிய 6 நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

கார்த்தி : பருத்திவீரன் என்ற முதல் படத்திலேயே மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார் கார்த்தி. அதன்பிறகு இவர் பல படங்கள் நடித்தாலும் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியவில்லை. ஆனால் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது.

அருண் விஜய் : ஆரம்ப காலங்களில் ஹீரோவாக பல படங்களில் நடித்த அருண் விஜய்க்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில் வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார். அஜீத்துக்கு இணையான கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். இதைத்தொடர்ந்து அருண் விஜய்க்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது.

சிம்பு : சிம்புக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த படம் வெங்கட்பிரபுவின் மாநாடு. சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை தழுவி வந்தது. இந்நிலையில் மாநாடு படத்தின் மூலம் தற்போது சிம்புவின் மார்க்கெட் உயரத்தை அடைந்துயுள்ளது.

எஸ் ஜே சூர்யா : இயக்குனர், நடிகர் என இரண்டிலும் பட்டையை கிளப்பியவர் எஸ்ஜே சூர்யா. இவர் ஹீரோவாக நடித்ததை காட்டிலும் வில்லனாக மிரட்டி இருந்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் சிம்புக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா மிரள வைத்திருந்தார்.

சிவகார்த்திகேயன் : சமீபகாலமாக பெரிய அளவில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. கிட்டத்தட்ட 100 கோடி வசூலைத் தாண்டி பிளாக்பஸ்டர் வெற்றியை அடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் டான் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

கமலஹாசன் : விஸ்வரூபம் 2 படத்திற்குப் பிறகு கமலின் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலின் விக்ரம் படம் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் கமலின் திரைவாழ்க்கையிலேயே முதல் நாள் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்