India | இந்தியா
மிக குறைந்த விலையில் Jio 5ஜி மொபைல்.. அம்பானியின் அதிரடி ஆஃபரால் ஆடிப்போன முன்னணி நிறுவனங்கள்
குறைந்தது 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் ஸ்மார்ட்போன்கள் எல்லாம் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.
இந்த நிலைமையை மாற்றவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவராகவும், இந்திய தொழில் அதிபராக விளங்கும் முகேஷ் அம்பானி, 20 கோடி ஸ்மார்ட்போனை மாதம் 50 லட்சம் சப்ளை செய்யும்படி லாவா இண்டர்நேஷனல், கார்பன் மொபைல் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு ஆர்டர்களை பிடித்து கொடுத்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் இந்த செயலால் இந்திய நிறுவனங்கள் உற்சாகத்தில் குதித்து வருகின்றனர். ஏனெனில் மலிவு விலைகளில் மார்க்கெட்டை ஆக்கிரமித்த சைனா நிறுவனங்களால் ரொம்பவே துவண்டு போன இந்த கம்பெனிகளுக்கு புத்துயிர் கிடைப்பது மட்டுமல்லாமல் அதே சைனா கம்பெனிகளை துண்ட காணோம் துணிய காணும்னு ஓடுவதை பாக்க போறாங்க.
நாட்டில் பாதி பேரு இன்னும் 2ஜிபோன்ல சிக்கி கிடக்கிறது, மனசுக்கு சங்கடமாய் இருக்கிறது சீக்கிரம் இவர்களையெல்லாம் 5ஜி என்கின்ற கரையில் சேர்க்க வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி ஆதங்கப்பட்டார்.
கூகுள், வாட்ஸ்அப் போன்ற உலக டெக் தாதாக்கள் ஜியோவில் முதலீடு செய்துள்ளனர். அவர்களுடைய டெக்னாலஜியை ஜியோவில் பயன்படுத்தி, ரிலையன்ஸ் தொழில் சாம்ராஜ்யத்தை எட்டாத உயரத்திற்கு கொண்டு செல்வதுதான் முகேஷ் அம்பானியின் ஆசை.
அதற்குத்தான் இந்த 3000 ரூபாய் Jio 5ஜி ஆஃபரை அறிமுகம் செய்துள்ளார் முகேஷ் அம்பானி. ஏனெனில் 40 கோடி இந்தியர்கள் Jio சிம் பயன்படுத்துகின்றனர் அதில் பாதிபேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர் மீதம் உள்ளவர்களையும் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வைப்பதற்காகவே முகேஷ் அம்பானி எடுத்த நல்ல முயற்சி தான் இந்த ஆஃபர்.
பள்ளிக்கூட பாடத்தில் இருந்து பிரைம் மினிஸ்டர் ஆலோசனை கூட்டம் வரை எல்லாமே இப்போ ஆன்லைனுக்கு வந்துருச்சு, இந்த சூழ்நிலையில் முகேஷ் அம்பானியின் மலிவான ஸ்மார்ட் போனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
வெறும் ரூ.3000 Jio 5ஜி ஸ்மார்ட்போன் வரும் டிசம்பரில் இருந்து சந்தையில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
